ஹஜ் பயணிகளின் சிரமத்தை பெருமளவில் குறைத்த ஹஜ் மெட்ரோ ரயில் சேவை !ஒரு காலத்தில் புனிதத்தலங்களை நடந்து கடப்பது என்பதும், கார், பஸ் போன்ற வாகனத்தில் கடப்பது என்பதும் பெருத்த சிரமங்களை ஏற்படுத்தி வந்தன அதிலும் பிரேக் டவுனாகும் வாகனங்களால் ஏற்படும் தொல்லைகளும் சொல்லி மாளாது, இப்படி பல மணி நேர போரட்டத்தை சில நிமிடங்களுக்கு குறைத்து சீரான பயணத்தை ஹஜ் பயணிகளுக்கு தந்தது தான் இந்த ஹஜ் மெட்ரோ ரயில் சேவை.

புனித மக்காவை சுற்றியுள்ள புனிதத் தலங்களான அரபாத், மீனா, முஜ்தலிபா மற்றும் ஜமாரத் இடையே கடந்த 2010 முதல் இயக்கப்படும் மஷாயர் ரயில்வே (Mashaer Railway) என அழைக்கப்படும் ஹஜ் மெட்ரோ ரயில்கள் ஹஜ் பயணிகளின் புனித தலங்களுக்கிடையேயான பயண சிரமத்ததை மிக வெகுவாக குறைத்துள்ளது.

அரபாத்தில் 3 நிலையங்கள், மினாவில் 3 நிலையங்கள், முஜ்தலீபாவில் 3 நிலையங்கள் மற்றும் ஜமாரத் நான்காம் தளத்தில் 1 நிலையம் என சுமார் 18.2 கி.மீ. தூரத்திற்கு 1 முறைக்கு 3500 பயணிகள் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 72,000 ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.

இந்தத் தடத்தில் 10 பெட்டிகள் கொண்ட 17 ரயில்கள் இயக்கப்படுகின்றன, இதில் ஒவ்வொருபுறமும் 60 வாயில்கள் ஏறி, இறங்கவுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 250 பயணிகள் பயணம் செய்யலாம். மணிக்கு 80 முதல் 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.

27 பயிற்சி பெற்ற சவுதி நாட்டவர்களால் கம்பியூட்டர் வழி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த மஷாயர் மெட்ரோ ரயில் பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.