"பத்து காசு முருக்கு, பள்ளிவாசலை நொறுக்கு" விநாயகர் சதுர்த்தியில் போடும் கோசங்களில் ஒன்று......விநாயகர் சதுர்த்தியில் விவகாரங்கள் கலவரங்கள் ஏன்? எதற்கு?

ஹிந்துச் சகோதரர்களின் எத்தனையோ பண்டிகைகளுக்கு இல்லாத பரபரப்பு இந்த விநாயகர் சதுர்த்திக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் பண்டிகைகளான தீபாவளியை விட பொங்கலை விட விநாயகர் சதுர்த்தி ஹிந்து மக்களிடம் அதிகமாக முன்னிருத்தப்பட்டு விட்டது.

விநாயகர் சதுர்த்தியை கலவர பண்டிகையாக மாற்றி இந்துக்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு அந்த ரத்தத்தை நக்கிக் குடிக்க காவி பயங்கரவாத ஓநாய்கள் காத்திருக்கின்றன.

நம் சொந்த தேசத்தில் நாம் விரும்பிய தெருவுக்குள் நம் கடவுள்களின் சிலையை கொண்டு செல்ல முடியவில்லையே என ஹிந்து மக்களை விநாயகர் சதுர்த்தியில் இவர்கள் உசார்படுத்துவார்கள்.
இந்தியாவை அரபு தேசமாக ஆக்க முயற்சிக்கின்றார்கள் என்று தூண்டிவிடுவார்கள்.

இதெல்லாம் ஏன் என்று நடுநிலை ஹிந்துச் சகோதர மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். உதாரணமாக மதுரை, கும்பகோணம், திருவண்ணாமலையை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் கோவில்கள் அதிகம் நிறைந்த ஊர்கள் இவை. இந்த ஊர்களில் தினசரி சாமி ஊர்வலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த ஊர்வலங்கள் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாகவும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளங்களின் வழியாகவும் செல்கின்றது. விநாயகர் சதுர்த்தியின் போது காவல்துறை பட்டியலிடும் தடை செய்யப்பட்ட பாதைகள் வழியாக தினசரி சாமி ஊர்வலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் ஊர்வலத்தில் மட்டும் ஏன் பரபரப்பும் பதட்டமும் உண்டாகின்றது? காலங்கலாமாக கோவிலுக்கு வெளியேயும், மரத்தடியிலும் நிற்கும் பிள்ளையார் சிலைகள் தாக்கப்படாமல் இருக்க விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் சிலைகள் மட்டும் திடீரென தாக்கப்படுவது ஏன்? மரத்தடி பிள்ளையாருக்கு விழாத செருப்பு மாலை ஊர்வலத்திற்கு தயார் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு மட்டும் விழுவது ஏன்? இதையெல்லாம் நடுநிலை ஹிந்துச் சகோதர மக்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் இதையெல்லாம் கலவர நோக்கத்தில் செய்யும் காவி பயங்கரவாதிகளின் வெறிமுகம் வெளியே தெரியும்.

முதலில் இந்த விநாயகர் சதுர்த்தி குறித்த வரலாற்று ஆய்வை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாலகங்காதர திலகரால் உண்டாக்கப் பட்டதுதான் இந்த விநாயகர் சதுர்தி ஆகும். சிவ பெருமானுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு பிள்ளை முருகன் இன்னொரு பிள்ளை விநாயகர் என்று தமிழ் ஹிந்துமத வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மத ஆய்வாளர்களின் கருத்துப்படி சிவ பெருமானுக்கு ஒரு மகன் மட்டும் தான். அதுதான் விநாயகர். வட மாநிலத்தவர்கள் முருகனை கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை.

வட மாநிலங்களில் சிவன் பார்வதி பிள்ளையார் ஆகிய மூன்று பேரை மட்டும் தான் கடவுளாக வணங்குகின்றனர். அதேநேரம் தமிழகத்தில் விநாயகரை கடவுளாக ஏற்றுக் கொண்டாலும் முருகனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் விநாயகருக்கு கொடுக்கப்படவில்லை. பண்டைய தமிழ்ப்புலவர்கள் முருகனை முன்னிருத்தியே பாடல்கள் புணைந்தார்களே தவிர விநாயகருக்கென பாடல்கள் இல்லை.

ஆனால் அதேநேரம் முந்தைய காலங்களிலும் கூட தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுத்தான் வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழக கிராமங்களில் மட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வந்தது. நகர்ப்புறங்களில் விநாயகர் சதுர்த்தி என்றால் என்னவென்றே தெரியாது. கிராமங்களில் கொண்டாடும் முறையும் வேறு. குளத்துகரையில் களிமண் எடுத்து அதில் விநாயகர் செய்வார்கள். சிலர் சாணியில் உருண்டை பிடித்து விநாயகர் செய்து அந்த சிலைகளை வைத்து கொளுக்கட்டை செய்து படையலிட்டு பின்னர் அதை உள்ளூர் கிணறுகள் ஆறுகள் கடல் போன்றவற்றில் கரைத்து விடுவார்கள். இவ்வளவுதான் விநாயகர் சதுர்த்தி.

ஆனால் வடநாட்டில் குடிகொண்டிருந்த காவி பயங்கரவாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிருத்தி தமிழகத்தின் உள்ளே நுழைந்தது. வீசின கையும் வெறுங்கையுமாக வந்தால் மக்கள் காவிகளை விரட்டி விடுவார்கள் என்பதாலும் காலங்கலமாய் நடந்து வரும் சாமி ஊர்வலங்களை கையில் எடுத்தால் தனியாக தெரியாது என்பதால் தங்களுக்கென விநாயகர் சதுர்த்தியை கையில் எடுத்தார்கள். விநாயகர் ஊர்வலத்தை கலவர பரபரப்பை உண்டாக்கி அதைத் தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

விநாயகரை கண்ணியப்படுத்துவதான் காவிகளின் எண்ணமா? இல்லவே இல்லை. காரணம் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலையைப் போட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மீது போட்டு ஒரு கலவரத்தை உண்டாக்கி அதை வேடிக்கை பார்ப்பது தான் இந்த காவி பயங்கரவாதிகளின் எண்ணம். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் கோவை, சிவகங்கை இன்னும் பல ஊர்களில் நடந்துள்ளன. ஆனால் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு விட்டு நாடகமாடிய காவிகளை கச்சிதமாக கைது செய்தது காவல்துறை. காவிகள் உண்மையிலேயே விநாயகரை கடவுளாக மதித்து இருந்தால் சிலைகளை கடலில் கரைக்கும் போது குப்புறப் போட்டு கட்டையால் அடிக்க மாட்டார்கள், செருப்புக்காலால் மிதி மிதியென மிதித்து சிலையைக் கரைக்கும் வேலைகளைச் செய்யமாட்டார்கள்.

ஊர்வலம் எடுத்துச் செல்ல பல பாதைகள் இருந்து பள்ளிவாசல் வழியாகத்தான் போவேன் என்று அடம் பிடிப்பது எதற்காக? சரி அப்படியே பள்ளிவாசல் வழியாக அனுமதித்த போது என்ன நடந்தது? பள்ளிவாசலுக்குள் செருப்பை வீசுவதும், சாராய பாட்டில்களை வீசி உடைப்பதும், கற்களை விட்டு வீசுவது, இதுதான் இவர்கள் செய்யும் நல்லிணக்கமா? இதுதான் இவர்கள் கேட்கும் உரிமையா? பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்று உன் வீட்டு பெட்ரூமை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பேன் உன் வீட்டுக்குள் செருப்பையும் கற்களையும் சாராய பாட்டிலையும் வீசுவேன் அதுதான் என் உரிமை அதை நீ பொருத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்?

சரி ஊர்வலத்தில் என்ன மாதிரியான கோசங்களை இந்த காவி பயங்கரவாதிகள் எழுப்புகின்றார்கள் என்பதையும் நடுநிலை ஹிந்துச் சகோதரர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

“பத்து காசு முருக்கு, பள்ளிவாசலை நொறுக்கு”
“துலுக்கனை வெட்டு, துலுக்கச்சிய கட்டு”
“துலுக்கன் போடா பாகிஸ்தான் இல்லேன்னா போவே கபரஸ்தான்”

இதுதான் காவி பயங்கரவாதிகள் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் செய்யும் அராஜக அட்டூழியங்கள். இதைத்தான் நடுநிலை பேனும், அமைதியைப் பேனும், நல்லிணக்கத்தைப் பேனும் நடுநிலைச் சகோதரர்கள் விரும்புகின்றார்களா? முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் கலவரத்தை உண்டாக்கி அதில் தங்களது அரசியல் சிம்மாசனத்தை அலங்கரிக்கத் துடிக்கும் காவி பயங்கரவாதிகளை நடுநிலை ஹிந்து மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.

பண்டிகைகள் கொண்டாடுவது ஹிந்துச் சகோதரர்களுக்கு அவர்களின் மத வழிபாட்டு உரிமை, எந்தத் தெரு வழியாக வேண்டுமானாலும் ஊர்வலத்தை எடுத்துச் செல்வதும் மத வழிபாட்டு உரிமையே! அதை மறுப்பதற்கு இல்லை.. ஆனால் அதை மற்ற ஊர்வலங்கள் நடத்தும் நடுநிலை ஹிந்துச் சகோதரர்கள் செய்யும் போது எவ்வித பிரச்சினைகளும் வருவதில்லையே! காவி பயங்கரவாதிகள் செய்யும் விநாயகர் ஊர்வலத்திற்கு மட்டும் ஏன் பிரச்சினை உண்டாகின்றது என்பதை நடுநிலை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொப்புள் கொடி உறவுகளாக ஒரு தாய் மக்களாக இணைந்து வாழ்ந்து வரும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் என்றைக்குமே அதுபோல வாழ வேண்டுமானால் காவி பயங்கரவாதிகளிடம் இருந்து விநாயகர் ஊர்வலங்கள் பிடுங்கப் பட்டு ஹிந்துச் சகோதர மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கலவரம் மட்டுமே நோக்கமாக கொண்ட காவிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இதன்மூலம் தமிழகம் மட்டுமல்ல! இந்தியாவே அமைதி பெறும்!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.