கோத்ரா ரயில் எரிப்பின் பின்னணியில் இந்துத்துவ அடிப்படைவாதிகள்.. முன்னாள் நீதிபதி கட்ஜு..உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜு கோத்ரா ரயில் எரிப்பின் பின்னணியில் இந்துத்துவ  அடிப்படைவாதிகளே உள்ளனர் என்று கூறியுள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த அவர், “பலர் என்னிடம் கோத்ரா ரயில் எரிப்பை இந்துத்வா அடிப்படைவாதிகள் தான் செய்தார்கள் என்பதற்கும் முஸ்லிம்கள் செய்யவில்லை என்பதற்கும் ஆதாரம் கேட்கின்றனர்..
என்னிடம் நேரடி ஆதாரங்கள் இல்லை ஆனால் சூழ்நிலை ஆதாரம் என்ற ஒன்று உண்டு. சூழ்நிலை ஆதாரங்களை பொறுத்தவரையில் நோக்கம் என்பது மிக முக்கியமானது..
இது அனைத்து கிரிமினல் வழக்கறிஞர்களுக்கும் தெரியும்.
இதன் மூலம் அந்த 54 ராம பக்தர்களை கொலை செய்வதன் மூலம் யார் பயனடைவார்கள் என்ற ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டும்.
இந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணமாக வைத்து முஸ்லிம்கள் மீதான தாக்குதலை யார் நடத்தினார்களோ அவர்கள் தான் இந்த ரயில் எரிப்பையும் நடத்தியிருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
இந்த ரயில் எரிப்பை தொடர்ந்து குஜராத்தில் மிகப்பெரிய மதரீதியிலான பிளவு ஏற்பட்டது. 91% இந்துக்கள் ஒரு பக்கமும் 9% முஸ்லிம்கள் மறு பக்கமும் என பிளவுபட்டனர். இந்த பிளவினால் யார் இலாபமடைந்தார்களோ அவர்கள் தான் இந்த ரயில் எரிப்பை நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தனக்கு 1939 செப்டெம்பர் 1 இல் நடைபெற்ற Gleiwetz சம்பவத்தை நினைவு படுத்துகிறது என்று கூறிய கட்ஜு,
ஹிட்லருக்கு போலாந்து மீது படையெடுக்க வேண்டும்..
ஆனால் அதற்கு ஒரு காரணம் வேண்டும் அதனால் சில ஜெர்மானியர்களை போலந்து இராணுவத்தினர் போல உடுப்புகளை உடுத்தச் செய்து அவர்களை ஜெர்மானிய வானொலி நிலையத்தை ஹிட்லர் தாக்கச் செய்தான்..
இதன் பிறகு போலந்து ஜெர்மனியை தாக்கிவிட்டது என்று கூறி தற்காப்பு நடவடிக்கையாவே ஜெர்மெனி போலந்தை தாக்குகிறது என்று முழு போலந்து மீது தாக்குதல் நடத்தினான்.
அது போலவே குஜராத் தாக்குதலும் நடந்தது..
ஆனால் பல மக்கள் குஜராத் கலவரத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது 54 ராம பக்தர்கள் எரிக்கப்பட்டதற்கான ஒரு எதிர்வினை என்று கூறுகின்றனர்.. ஆனால்,,
உண்மையில் இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முதல் அந்த 54 ராம பக்தர்கள் கொல்லப்பட்டனர்,,
அதை வைத்து இஸ்லாமியர்கள் வேட்டையாடப்பட்டனர், ஆனால் சட்டத்தினை தங்கள் வசம் வைத்திருக்கும் காவிகள் இந்த உண்மைகளை அப்படியே மூடி மறைத்து விட்டனர், சில மக்களும் அதை நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது வேதனையே..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.