அமீரகத்தில் ஹஜ் பெருநாள் விடுமுறை அதிகாரபூர்வ அறிவிப்பு !எதிர்வரும் வாரம் உலகெங்கும் தியாகத் திருநாள் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை நாட்களை அமீரக அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை தினங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் இரு தினங்கள் வெள்ளி, சனி விடுமுறையை ஏற்கனவே அனுபவித்து வருபவர்களுக்கு சேர்த்து தொடர்ச்சியாக 5 நாட்கள் கிடைக்கும், இவர்கள் கொடுத்து வைத்த மகராசன் வகையை சார்ந்தவர்கள்.

வெள்ளிக்கிழமை மட்டும் வார விடுமுறையுள்ள எங்களைப் போன்ற தனியார் நிறுவன ஊழியர்கள் இடையில் சனிக்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும், நாங்கள் எல்லாம் நன்மைக்கே என ஆறுதல் பட்டுக்கொள்ளும் வகையை சார்ந்தவர்கள்.

அரசுத்துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை தான் லீவுங்களாம், வரும் வெள்ளி முதல் அடுத்த சனி வரை 9 நாட்கள், இவர்கள் அனுபவி ராசா அனுபவி வகையை சார்ந்தவர்கள்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.