கோவையில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் வன்முறை: போலீஸ் வாகனத்திற்கு தீவைப்பு
கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலையை அடுத்து கோவையில் இந்து முன்னணி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர் ..

இந்து முன்னணியின் கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளரான சசிக்குமார், நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் இந்து முன்னணி இயக்க அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

நிறுத்தி வைத்திருந்த காவல்துறை வாகனத்திற்கு தீயிட்டு எரித்துள்ளனர். மேலும் இந்த கலவரத்தில் கற்களை கொண்டு வீசியதில் காவல்துறையினர் சிலர் காயமடைந்தனர்.

மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பத்திற்கும் மேற்ப்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

முஸ்லீம் மக்களுடைய வாகனங்கள் . சொத்துக்கள் ஆகியவற்றை குறிவைத்து இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எனினும் காவல்துறை குற்றவாளிகள் கலவரம் செய்கையில் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய சம்பவங்களால் நேற்றும், இன்றும் கோவை மாநகர் முழுவதும் பத்தட்டம் நிறைந்து காணப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.