முத்துப்பேட்டைபகுதியில் அடிக்கடி மின் தடை வரத்தகர்கள் கண்டனம்முத்துப்பேட்டை வர்த்தகக் கழக செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. பொது செயலாளர் கண்ணன் அறிக்கை வசித்தார். துணைத்தலைவர் மெட்ரோ மாலிக் வரவேற்றார். கூட்டத்தில், முத்துப்பேட்டை நகரில் செம்படவன்காடு முதல் பழைய பேருந்து நிலையம் வழியாக ஆலங்காடு பைபாஸ் வரை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான சாலைகள் குண்டும் குழியுமாக மக்களும், வாகனங்களும் பயன் படுத்த முடியாத அளவில் உள்ளன.

உடனடியாக இந்த சாலையை அரசு சீரமைத்து தர வேண்டும். முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாக மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இைத கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை மின்வாரியம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக அரசு உடனடியாக அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.