ஹஜ் செய்திகள்: இன்று மாலை பிறை பார்க்கும்படி அறிவுறுத்தல் !சவுதியின் உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளபடி இன்று (வியாழன் பின்னேரம்) பிறை பார்க்கும் நாளாகும். இன்று நேரிடையாக கண்களால் அல்லது பைனாகுலர் மூலமாக பிறை பார்ப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள நீதிமன்றங்களிலோ அல்லது நீதிமன்றங்களுடன் தொடர்புடைய மையங்களிலோ தகுந்த சத்திய பிரமாணங்களுடன் அறிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது.

ஒருவேளை இன்று பிறை காணப்பட்டு உறுதி செய்யப்பட்டால், ஹிஜ்ரி 1437 ஆம் வருட துல்ஹஜ் பிறை ஆங்கில தேதி செப். 2 முதல் கணக்கிடப்படும் என்றும், புனித ஹஜ்ஜின் நடவடிக்கைகள் பிறை 8 முதல் அதாவது ஆங்கில தேதி செப். 9 முதல் துவங்கும்.

இன்று பிறை காணப்படாவிட்டால் செப். 3 ஆம் தேதி துல்ஹஜ் பிறை 1 என கணக்கிடப்பட்டு செப். 10 அன்று புனித கடமைகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.