பள்ளிக்கூடங்களின் புதிய பரிணாமம்!!
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தின் இறை இல்ல கல்வித் திட்டமாக தொடங்கப்பட்டு பின்னர் ஆசிரியர்களின் வீடுகளில் செயல்பட்டு பத்தாம் நூற்றாண்டில் அப்போதைய பாக்தாத் மன்னர் நிஜாம் அல் முலூக் அவர்கள் மூலம் பள்ளிக்கூடங்களாக உருப்பெற்றதை நாம் அறிவோம்.  ஆக இறை இல்லத்தில் தொடங்கப்பட்டு பள்ளிக்கூடமாக உருவாவதற்கு மூன்று நூற்றாண்டுகள் தேவைப்பட்டது.  இப்படியாக இந்த பள்ளிக்கூட திட்டமானது பத்தாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான ஐந்து நூற்றாண்டுகளில் பல்கி பெருகியது.  அதோடல்லாமல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கல்வியானது இலவசமாக போதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெல்ல மெல்ல வளர்ந்து எட்டு நூற்றாண்டுகளாக சென்று கொண்டிருந்த திட்டத்தை செயல்படுத்துவதிலும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புவதிலும் ஒரு புதிய எழுச்சியினை பதினைந்தாம் நூற்றாண்டில் அப்போதைய இஸ்லாமிய அரசான உதுமானிய பேரரசு கொண்டு வந்தது. இப்படி உதுமானிய பேரரசால் கொண்டுவரப்பட்ட கல்வித் திட்டமானது குல்லியி என்றழைக்கப்பட்டது.

குல்லியி கல்வி திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் மிகப்பெரிய வளாகங்களில் செயல்பட்டது.  வளாகத்தினுள் பள்ளிக்கூடத்துடன் ஒரு மருத்துவமனை,  ஒரு பள்ளிவாசல்,  ஒரு விடுதி மற்றும் ஒரு உணவு பரிமாறும் அறையையும் கொண்டிருந்தது. இதன் மூலம் கல்வி பயில வரும் ஒருவரின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய உதுமானியர்களால் கொண்டுவரப்பட்ட  இந்த திட்டம் ஏதுவாக அமைந்தது.  அதோடல்லாமல் இத்திட்டமானது மிகப்பெரிய கல்வி புரட்சியை ஏற்ப்படுத்தி கல்வியின் முக்கியத்துவத்தை இவ்வுலகிற்கு பறைசாற்றியது.

குல்லியி கல்வி திட்டத்தின் மூலம் தங்கி கல்வி கற்கும் விடுதி திட்டத்தையும் முஸ்லீம்கள் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.  இதன் மூலம் முஸ்லீம்களின் தொலைநோக்கு பார்வையையும், அவர்களின் சிந்தனை ஆற்றலையும் தெளிவாக உணர முடிகின்றது.

இந்த குல்லியி கல்வித் திட்டதின் மூலம்  உருவாக்கிய மிகப்பெரிய கல்வி எழுச்சியின் தாக்கத்தை உணர்ந்த கிறிஸ்தவர்கள் இத்திட்டத்தை பதினேழாம் நூற்றாண்டில் இறுதியில் செயல்படுத்த தொடங்கி இன்று கல்வித் துறையில் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளனர். அதற்கு உதாரணமாக நம் தமிழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள் இன்று கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் இல்லாத
ஒரு நகரத்தை கூட நம்மால் கண்டுகொள்ள இயலாத அளவிற்கு அவர்கள் தங்களுடைய மதத்தை பரப்புவதற்கும் இத்திட்டத்தை சரியான காரணியாக பயன்படுத்தி வருகின்றன்ர்.  ஆனால் குல்லியி கல்வி திட்டத்தினை உருவாக்கிய முஸ்லீம் சமூகத்தின் இன்றைய தலைமுறையினரோ இதனை மறந்தும் இதனை அறியாயததும் மிகவும் வருத்தத்திற்குரியது.

பெற்ற வரலாற்று படிப்பினைகளின் மூலம் குல்லியி கல்வித் திட்டமானது முஸ்லிம்களால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அவாவுடன் பள்ளிக்கூடங்களின் வரலாறு முடிகின்றது.

ஹாரிஸ்

வரலாற்றின் வேர்கள் தொடரும்…
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.