அதிரை பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!!அதிரை பேரூந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை: அதிகாரிகள் முன்னிலையில் அறிவிப்பு பலகைகள் வைப்பு ! 

அதிரை பேருந்து நிலையத்தில் அமைத்திருக்கும் டாக்ஸி ஸ்டாண்டை அப்புறப்படுத்த கோரி அதிரை RTO மற்றும் அதிரை சேர்மனுடன்  டாக்ஸி உரிமையாளர்கள்  சில மணி நேரம் வாக்குவாதம்  தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் டாக்சி மினி வேண் போன்ற வாகனங்கள் மாற்றப்பட்டு  அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது .

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து இரண்டு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலைய தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் கடந்த 30-09-2015 அன்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில் பேருந்து நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவரது மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி ஆர் சுந்தர், நீதிபதி வி.எம் வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரை பேருந்து நிலையத்தின் வாகன ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை தாசில்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு கடந்த 13-10-2015 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரி 22ந்தேதி, அப்போது பொறுப்பில் இருந்த பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்மேனன், வட்டாட்சியர் சேதுராமன், வட்டார போக்குவரத்துதுறை அலுவலர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன், பேராவூரணி காவல் நிலைய ஆய்வாளர், மதுக்கூர் காவல் நிலைய ஆய்வாளர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நீலாவதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் அதிரை பேரூந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.

இந்நிலையில் இன்று காலை அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த்மேனன், பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி ஆகியோர் முன்னிலையில் அதிராம்பட்டினம் போலீசார் பாதுகாப்புடன் அதிரை பேருந்து நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து பேருந்து நிலையப் பகுதிகளில் இரண்டு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டால் காவல் துறை மூலம் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கான அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.