இந்து முன்னணியினரை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் மனுஇந்து முன்னணி பிரமுகர் படுகொலையை ஒட்டி நடத்தப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டுமென மாநகர காவல் ஆணையாளரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். மேலும், வன்முறையை தூண்டும் விதமாக பேசிய இந்து முன்னனியின் தலைவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள், அரசு பேருந்துகள்,சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. துடியலூர் பகுதியில் இரண்டு கடைகளுக்கும், காவல் துறை வாகனத்திற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த வன்முறையில் ஈடுபட்டதாக 136 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகுமார் படுகொலையை ஒட்டி நடத்தப்பட்ட வன்முறைக்கு காரணமான இந்துத்துவ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கோவையை குஜராத்தாக மாற்றுவோம் என்று சம்பவம் நடந்த நாள் அன்று இந்து முன்னனியின் காடேஸ்வர சுப்பரமணியன் அன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்ததும் கலவரத்திற்கு முக்கிய காரணமாகும் .ஆகவே கோவையில் நடத்தப்பட்ட வன்முறையினால் சிறுபான்மையின மக்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்து இருப்பதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் காவல் ஆனையரிடம் வலியுறுத்தினர்.

முற்போக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வெண்மணி, சுந்தரமூர்த்தி, பாலகுமார், மு.ஆனந்தன், ஆறுச்சாமி, மாசேதுங், கரீம், நிக்கோலஸ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். வியாபாரிகள் சங்கத்தினர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர இருதயராஜ காவல் ஆனையரை சந்தித்து மனு அளித்தார்.
இதில், படுகொலை நிகழ்ந்த அன்று பதட்ட சூழலை கருத்தில் கொண்டு காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் கோவையில் இத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்காது என்றும், இந்த வன்முறையாளர்களாள் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தரவேண்டும் எனவும், மேலும், அனைத்து கடைகளுக்கும் உரிய பாதுகாப்பும், காவல்துறை நம்பிக்கையை ஏற்படுத்தி பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.