சிங்கப்பூர் விமான நிலையத்தில் நூதன மோசடி இளைஞர் கைது !விஞ்ஞான தொழிற்நுட்பத்தை இப்படியும் மோசடிக்கு பயன்படுத்தலாம் என நிரூபித்துள்ளார் 33 வயதுடைய சிங்கப்பூர் இளைஞர் ஒருவர்.

கடந்த 3 வாரங்களாக, சிங்கப்பூர் ஏர்போர்ட் உள்ளே அமைந்துள்ள 'எக்ஸிகியூடிவ் லவுன்ஞ்' என அழைக்கப்படும் (சிறப்பு விருந்தினர்கள் பயணிகள் தங்கும்) பகுதியில் போலியான போர்டிங் கார்டுகள், எக்ஸிகியூடிவ் பாஸ்கள் என அனைத்தையும் பக்காவாக தயாரித்து வைத்துக் கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் அமைந்துள்ள 9 எக்ஸிகியூடிவ் லவுன்ஞ் உள்ளும் நாளொரு லவுஞ்ச் சுற்றி பொழுதொரு சாப்பாடு தூக்கம் குளியல் என சொகுசாக தங்கி ஏமாற்றி வந்துள்ளார்.

ஓசியில் கிடைத்த ஆடம்பர வாழ்க்கையால் கர்வம் தலைக்கேற, லவுன்ஞ் ஊழியர்களுடன் அவ்வப்போது மல்லுக்கட்ட, இறுதியில் குட்டு வெளிப்பட்டு தற்போது 2 வார தண்டனையாக கம்பி எண்ணிக் கொண்டுள்ளாராம்.

நமக்கு யோசனையே வரமாட்டேங்குது! ஆனா பய என்னாமா யோசிச்சிருக்கான்!!

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.