முத்துப்பேட்டை விநாயக ஊர்வலத்தில் கல் எறிந்து பதற்றத்தை ஏற்படுத்திய நான்கு பேரை அடையாளம் கண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கைதுநேற்று 21/09/2016  காலை 11 மணி ....

காவல் துறை அதிகாரிகள் என்னுடன் தொடர்பு கொண்டு தந்த தகவலின்படி முத்துப்பேட்டை  விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கல் எறிந்து சேதங்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய நான்கு பேரை அடையாளம் கண்டு இரண்டு  நாட்களுக்கு முன்பு அவர்களை கைது செய்து வழக்குத் தொடர்ந்திருப்பதான செய்தி உறுதி படுத்தப்பட்டுள்ளது.

நாம் மேற்கொண்ட அமைதி வழியை மதித்து சற்று தாமதமானாலும் குற்றவாளிகளை சரியாக அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினரை மதிக்கிறோம்; பாராட்டுகிறோம். அதே நேரத்தில் வன்முறைக்கு கொஞ்சம்கூட இடம் தராமல் அமைதிகாத்த அனைத்து நல்லுள்ளம் கொண்டோரும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

இனிவரும் ஆண்டுகளில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடந்திராவண்ணம் ஊர்வலப்பாதை மாற்றம்பெறவதே சிறந்த தீர்வு. அதற்கான வழிமுறைகளில் முறையான கவனம் செலுத்துவதே நமது கடமை. பணியாற்றுவோம் இன்ஷாஅல்லாஹ்.

அன்புடன்
எம். அப்துல் ரஹ்மான்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.