முழு அடைப்புக்கு ஆதரவு நாளை-தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்!
விவசாய மற்றும் வணிகர் சங்கங்களின் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்கு பதிலாக சனிக்கிழமையன்று பள்ளிகள் இயங்கும் என்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேபோல் தனியார் பேருந்து உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு தனியார் பள்ளி உரிமையாளர் சங்கமும் ஆதரவளிப்பதாக அதன் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

இதனால் நாளை 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக நாளை மறுநாள் சனிக்கிழமையன்று தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.