சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை!சுவாதி கொலை வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஐடி பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமாரை நீண்ட நாட்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். நெல்லையில் உள்ள அவரது வீட்டில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில்தான் போலீசார் ராம்குமாரை கைது செய்தனர்.

அவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டாரா என்ற சர்ச்சை இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென்று ராம்குமார் மின்கம்பியை கடித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டிருந்தது. செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் போதே ராம்குமார் உயிரிழந்துவிட்டார் என்றும் உடல் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளன. முக்கியமான கொலையில் பலத்த பாதுக்காப்போடு வைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் மரணம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.