முத்துப்பேட்டை அருகே தூக்கில் பட்டதாரி வாலிபர் பிணம் போலீசார் விசாரணைமுத்துப்பேட்டை அருகே கரையாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் அகிலன் (வயது25). பட்டதாரியான இவர் வேலையில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தில்லைவிளாகம் கிளைதாங்கி ஆற்றின் மேல்கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக அகிலன் தொடங்கி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகிலன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேரேதும் காரணமாக? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.