முத்துப்பேட்டையில் இன்று நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேலானவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்!பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனாந்தம் (36 வலக்குகள் நிலுவையில் உள்ளவர்) தகவல்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில் 24-ம் ஆண்டு வெற்றி விநாயகர் ஊர்வலம்; இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த ஊர்வலத்தில் வழக்கம் போல் 19 விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. ஊர்வலம் ஜாம்புவானோடை சிவன் கோவிலிருந்து புறப்பட்டு முக்கிய பகுதிகள் வழியாக முத்துப்பேட்டை நகர் வந்து செம்படவான் காடு பாமினி ஆற்றில் கரைக்கப்படுகிறது. ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். அரசு சார்பில் பல்வேறு முன் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கருப்பு முருகனாந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்:
இந்து முன்னணி சார்பில் முத்துப்பேட்டை வெற்றி வினாயகர் ஊர்வலம் 24ம் ஆண்டாக இன்று நடைபெறுகிறது இதில் கோயம்புத்தூர் ஸ்ரீசாஸ்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்துக்கொள்கிறார,; மேலும் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேருக்கு மேல் கலந்துக் கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். தெய்வ பக்தியுடனும், தேசபக்தியுடன் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் அனைத்து தரப்பு சமுதாயத்தை சேர்ந்த நண்பர்களும், இளைஞர்களும் தவறாது கலந்துக் கொள்ளவேண்டும். மேலும் ஊர்வலம் சிறப்பாக நடைபெற அரசு அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பேட்டியின் போது பா.ஜ.க மாவட்ட தலைவர் பேட்டை சிவா உடன் இருந்தார்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.