துபாயில் நண்பர்கள் வாகன உதவி செய்தால் குற்றமா ?துபையில் தற்போது அனுமதியில்லா டேக்ஸிக்களை இயக்குவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரமும் அதற்கெதிரான நடவடிக்கைகள் குறித்தும் சாலை மற்றும் போக்குவரத்துத் துறையால் (RTA) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன் தொடர்ச்சியாக பிடிபடும் நபர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதங்கள் குறித்த எச்சரிக்கை பலகையும் விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் நடப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கை பலகையால் பலரும் அச்சமடைந்துள்ள நிலையில் மேல் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது விமான நிலையங்கள் போன்ற இடங்களில் நண்பர்களையோ அல்லது நெருங்கிய உறவினர்களையோ ஏற்றியோ, இறக்கியோவிட்டால் அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது மாறாக ஆய்வாளர்கள் விசாரிக்கும் போது முறையாக ஒத்துழைத்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பதிலையோ அல்லது உரிய ஆவணங்களையோ சமர்ப்பித்தால் விடுவிக்கப்படுவார்கள் அல்லது தவறான முறையில் ஆய்வாளர்களால் தண்டிக்கப்பட்டுவிட்டதாக கருதுபவர்கள் துபை போக்குவரத்துத் துறையின் குறைகள் களையும் குழுவிடம் (grievance committee) 8009090 என்ற இந்த எண்ணில் தொடர்பு கொண்டு முறையீடு செய்யலாம்.

அதேவேளை, பணத்திற்காக வாகனத்தை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் திர்ஹம் 20,000 முதல் 50,000 வரை அபராதம் செலுத்த நேரிடும் அதாவது தனிநபர் செய்த குற்றமெனில் திர்ஹம் 20 ஆயிரமும், ஒரு நிறுவனமோ அல்லது மொபைல் ஆப்ஸ் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி பதிவு செய்தோ இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான டேக்ஸி சேவையில் ஈடுபட்டிருந்தால் 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், அங்கீகாரமில்லாத வாகன ஒட்டிகளை கொண்டு அனுமதி பெற்ற டேக்ஸி, லிமோசின் வாகனங்களை இயக்கினாலும் 20 ஆயிரம் திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல் அங்கீராமில்லாத வாகனங்களை கொண்டு துபை மாநகருக்குள் அல்லது பக்கத்து எமிரேட் நகரங்களுக்கோ வாகனத்தை இயக்கினாலும் 20 ஆயிரம் தண்டம் நிச்சயம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.