அதிரையை சுற்றியுள்ள பகுதியில் விநாயகர் ஊர்வலத்தின் போது வெடி வெடிக்க அனுமதி கிடையாதுபட்டுக்கோட்டை பகுதியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வெடி வெடிக்க அனுமதி கிடையாது என்று ஆலோசனை கூட்டத்தில் ஆர்டிஓ தெரிவித்தார். பட்டுக்கோட்டை கோட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது மற்றும் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் வரும் 7, 8ம் தேதிகளில சிலை ஊர்வலம் நடைபெறுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ அலுலவகத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ கோவிந்தராசு தலைமை வகித்து பேசுகையில், காவல்துறையிடம் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும்.

புதிய சிலைகள் வைக்க காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. வர்ணம் பூசப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும். பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தப்படும். மதுக்கூர் பகுதிகளில் உள்ள குளங்களில் சிலைகளை கரைக்க ஏதுவாக தண்ணீர் நிரப்ப விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிலைகள் கொண்டு செல்லப்படும் பகுதிகளில் போதிய மின்விளக்கு வசதிகளை மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக விழா கமிட்டியினர் உள்ளூர் ஆலோசனை கூட்டம் நடத்தி அமைதியாக விழா நடத்த வேண்டும். பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக ஏரிப்புறக்கரை கடற்கரைக்கு செல்லும் ஊர்வல பாதையை பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரி செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காவல்துறையினரால் குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில் அமைதியாக நடைபெற வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதையில் விழா கமிட்டியினர் வெடிப்பொருட்களை வெடிக்க கூடாது என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.