இந்தியா வருடத்திற்கு எத்தனை லட்சம் டன் உணவுகளை வீணடிக்கிறது தெரியுமா..?இந்தியா வருடத்திற்கு 6 கோடி 70 லட்சம் டன் உணவுப் பொருட்களை வீணடிக்கிறது என்று அன்மையில் வெளிவந்துள்ள ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு அறிக்கை இந்த ஆய்வை நடத்திய விவசாய அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிபுணர்கள் இது பற்றி தெரிவிக்கையில் ஆண்டிற்குப் பிரட்டன் உற்பத்தி செய்யும் உணவுகளை விட இந்தியாவில் வீண்படுத்தப்படும் உணவு அதிகம் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வருடாந்திர மொத்த உணவு தேவையே 6 கோடி 70 லட்சம் டன் தான் என்றும், இதை வைத்து மொத்த பீகார் மாநிலத்திற்கும் ஓர் ஆண்டிற்கு பற்றாக்குறை இன்று உணவு அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

92,000 கோடி ரூபாய் மதிப்பு
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி ஆண்டிற்கு 92,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவை நாம் வீணடித்து வருகிறோம். இது 60 கோடி இந்தியர்களுக்கு இந்திய அரசு உணவு மானியமாக அளிப்பதில் மூன்றில் ஒரு பங்குக்கான செலவு என்று கூறியுள்ளது.

எரிபொருள் செலவு,
உணவுப் பொருட்கள் வீணாவது போன்றவை விவசாயிகளை பெரிதும் பாதிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 40 சதவீதம் வரை உணவுப் பொருட்ள் ஐ.நாவின் வளர்ச்சித் திட்ட அமைப்பு இந்தியாவில் 40 சதவீதம் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை போன்ற குறைந்த காளத்தில் கெட்டுப் போகாக் கூடியவை அதிகம் என்று தெரிவித்துள்ளது. பூச்சிகள், வாணிலை மாற்றங்கள், நவீன சேமிப்பு கிடங்குகள் இல்லாதது போன்றவே இவ்வளவு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூரப்படுகிறது.

போக்குவரத்தின் போது மட்டும்
அதுமட்டும் இல்லாமல் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதிகளவில் வீணடிக்கப்படுவதாகவும், ஆண்டிற்கு 10 லட்சம் டன் வெங்காயமும் 2.2 லட்சம் டன் தக்காளியும் 5 லட்சம் முட்டைகளும் போக்குவரத்தின் போது மட்டுமே வீணடிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

தீர்வு என்ன?
இப்படி அளவுக்கு அதிகமான உணவு வீணாவதை தடுக்க சில தீர்வுகளையும் இந்த அறிக்கையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

1) பண்ணைப் பயிற்சி வழிமுறைகளை அமைத்தல்

2) குளிர்பதன சேமிப்பு முதலீடு

3) விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைப் பண்ணையில் இருந்து சந்தைக்கு எடுத்துச் செல்ல மென்மையான பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்துதல்.

4) உணவு சேமிப்புக் கிடங்குகள் தரத்தை உயர்த்துதல் வேண்டும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.