சேமியா கேசரி -செய்முறைசேமியா - 1 கிண்ணம்
சர்க்கரை - 3/4 கிண்ணம்
தண்ணீர் - 2 கிண்ணம்
நெய் - 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
காய்ந்த திராட்சை - சிறிது
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை


ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய்யைச் சேர்த்து, அதில் சேமியாயாவைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கிண்ணம் தண்ணீரை கொதிக்க விடவும். நீர் கொதிக்கும் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவைப் போட்டுக் கிளறி விடவும். சேமியா நன்றாக வெந்ததும் அத்துடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் கேசரி பவுடரை சிறிது நீரிலோ அல்லது பாலிலோ கரைத்து கேசரியில் ஊற்றிக் கிளறவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் கேசரியில் போட்டு, மீண்டுமொருமுறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

குறிப்பு: சேமியாவில் சர்க்கரைச் சேர்த்த பிறகு கேசரியை நீண்ட நேரம் அடுப்பில் வைத்துக் கிளறக்கூடாது. அப்படி செய்தால், சர்க்கரை பாகாகி, சேமியா "நறுக்கு" தட்டி விடும். மெல்லிய ரக சேமியாவாக இருந்தால், தண்ணீரைச் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.
Share on Google Plus

1 comments:

  1. Kesari powder entral?
    Semiya entral?

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.