முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் அதிமுக பிரமுகர் வைத்த ஆக்கிரமிப்பு பெட்டிகடை அகற்றம்முத்துப்பேட்டை பஸ் நிலையத்தில் அதிமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு பெட்டி நேற்று அகற்றப்பட்டது. இதையடுத்து காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்து அந்த இடத்தில் கொடி ஏற்றினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் ராஜீவ் காந்தி சிலை வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அதிமுக பிரமுகர் ஒருவர் கடை போட தகர மேற்கூரையுடன் கூடிய இரும்பு பெட்டியை இறக்கி வைத்திருந்தார்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியினர் முத்துப்பேட்டை காவல் நிலையம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்  ஜான் முகமதுவிடமும் புகார் மனு கொடுத்தனர். தகர பெட்டியை அகற்றிக்கொள்ள 24 மணிநேரம் கெடு கொடுத்து பேரூராட்சி நோட்டீஸ் வழங்கியது. கெடு முடிந்து 4 நாட்களாகியும் பெட்டியை அதிமுக பிரமுகர் அகற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்ட அறிவிப்பு வெளியிட்டனர்.
   
இந்நிலையில் நேற்று மாலை தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது ஆகியோர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தகர பெட்டியை அங்கிருந்து அகற்றினர்.  டி.எஸ்.பி அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அப்போது சுமார் 20 பேருடன் அங்கு வந்த அதிமுக ஒன்றிய துணை செயலாளர் ஜெகன், பெட்டியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் பெட்டியை அகற்றி, அதை பேரூராட்சி குப்பை வண்டியில் ஏற்றிச்சென்றனர். பின்னர் அந்த இடத்துக்கு வந்த காங்கிரசார் மகிழ்ச்சியடைந்து, நகர தலைவர் ஜகபர் அலி தலைமையில் அங்கு கொடி ஏற்றினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.