தொடரும் திண்டுக்கல் பதற்றம் மசூதி, பாஜக அலுவலக மீது பெட்ரோல் குண்டுவீச்சு!கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட இந்த பரபரப்பான நிலையில் நேற்று முன் தினம் நேருஜி நகர் மசூதியில் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசினர்

இந்த நிலையில் திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மற்றும் அக்கட்சியின் பிரமுகர் போஸின் கார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த சங்கர் கடந்த வாரம் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் திண்டுக்கல் நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் என்பவரது கார் மீது மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் போஸின் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதேபோல் திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே இந்து முன்னணியின் சங்கர் வெட்டப்பட்டுள்ளார்; கோவையில் மற்றொரு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.