தமிழக பாஜக உடைந்தது . மறுமலர்ச்சி பாஜக என புதிய கட்சி தோற்றம்தமிழக பாஜக ஏற்கனவே தொண்டர்களே இல்லாமல் தத்தளித்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனியாக அனைத்து இடத்திலும் போட்டியிட்டு படுதோல்வியும் அடைந்தது.
இந்நிலையில் தமிழிசை செளந்திரராஜனுக்கு தமிழக பாஜகவிலேயே எதிர்ப்புகள் வலுத்த நிலையில் தற்போது மறுமலர்ச்சி பாஜக என கட்சி இரண்டாகியுள்ளது. பாஜகவில் தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ஜெயகுமார் என்பவர் தற்போது மறுமலர்ச்சி பாஜக' என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
தனது கட்சி குறித்து ஜெயகுமார் கூறுகையில், "தமிழகம் முழுவதும் பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கவுள்ளோம். பாஜகவில் முக்கிய பதவி வகிக்கும் நிர்வாகிகள் சிலர் விரைவில் புதிய அணியில் இணையவுள்ளனர். தமிழக பாஜக மற்றும் தேசிய அளவில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. தமிழக மீனவர் பிரச்சனைகளுக்காக மாநிலம் முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்.
தமிழக பாஜக நிர்வாகிகள் இதுவரை மீனவர் பிரச்சனைக்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி, பாலாறு மற்றும் சிறுவாணி ஆகிய தமிழக நீர் உரிமைகளுக்கு தீர்வு தேடி தராததால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டது. இது போன்ற காரணங்களால் நாங்கள் பாஜகவில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கியுள்ளோம். நாங்கள் தமிழக மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவோம்"  என்று தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.