அதிரையில் ஆதரவற்ற நிலையில் வஃபாத்தான முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த அதிரை தமுமுக வினர் (படங்கள் இணைப்பு)அதிரை வண்டிப்பேட்டையில் வயதான யாசகம் கேட்கக்கூடிய முதியவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று  காலை உடல்நலக் குறைவால் வஃபாத்தானார். இதையடுத்து ஆதரவற்ற நிலையில் இருந்த ஜனாசாவை அதிரை தமுமுக வினர் குளிப்பாட்டி, கஃபனிட்டு, நல்லடக்கம் செய்தனர்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக தலைவர் அஹமது ஹாஜா, நகர மமக துணை செயலாளர் சேக்காதி, மமக இளைஞர் அணி செயலாளர் கனி, தமுமுக 12வது வார்டு கிளை செயலாளர் சலீம், தமுமுக நகர மாணவரணி செயலாளர் நூர் முஹம்மது, மமக வை சேர்ந்த ஹாலித், நசுருத்தீன் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். இதற்கான செலவுகள் அனைத்தும் தமுமுக வின் கூட்டுக்குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியால் வழங்கப்பட்டது என அக்கட்சியினர் நம்மிடம் தெரிவித்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.