முத்துப்பேட்டையில் அதிகாரிகள் வராததால் வாக்காளர் சிறப்பு முகாமுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம்முத்துப்பேட்டையில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமுக்கு அதிகாரிகள் உரிய நேரத்தில் வராததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வெகுநேரம் காத்திருந்தனர். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு, திருத்த முகாம் நேற்று நடந்தது. இதனால் பொதுமக்கள் பலரும், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான மையங்களுக்கு காலை 10 மணிக்கு சென்றனர். ஆனால் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் குறித்து நேரத்துக்கு வரவில்லை.

முத்துப்பேட்டை அருகே பேட்டை மையத்தில் உரிய நேரத்துக்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருந்தனர். ஆனால் முகாம் துவங்கி 2 மணி நேரம் கழித்து தான் அதிகாரிக்ள வந்தனர். அதன்பிறகு தேவையான படிவங்களை பூர்த்தி செய்து பொதுமக்கள் அளித்தனர். இதுகுறித்து வார்டு முன்னாள் கவுன்சிலர் கணேசன் கூறுகையில், வாக்குச்சாவடி மையத்துக்கான அலுவலர் உரிய நேரத்தில் வந்து சேராததால் பலர் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றுவிட்டனர் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.