மியன்மார் (பர்மா) ரகினே மாநிலத்தில் பல பள்ளிவாசல், மத்ரசாக்கள் இடிப்புமியான்மர் (பர்மா) பவுத்த தீவிரவாதிகளால் பல ஆயிரம் முஸ்லிம்கள் கொள்ளப்பட்டு இன சுத்திகரிப்பு நடந்தது உலகமே அறிந்த மாபாதக செயல் என்பது தெரிந்த விஷயம் அங்கு இன்றுவரை முஸ்லிம்கள் பல தகுதலுக்கு ஆளாகிவருகின்றனர்

மியன்மாரில்  மதக்கலவரம் இடம்பெற்ற ரகினே மாநிலத்தில் பல டஜன் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய பாடசாலைகள் (மத்ரசா) உட்பட 3000க்கும் அதிகமான சட்டவிரோத கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் புதிடொங் மற்றும் மொங்டோ நகரங்களில் அண்மைய ஆண்டுகளில் சட்டவிரோத கட்டடங்கள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடும் பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்களுக்காக மாநில அமைச்சர் கேணல் ஹிடைன் லின், நிலைமை கட்டுப்பாட்டை மீறும் முன்னர் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த இரு நகரங்களிலும் 12 சட்டவிரோத பள்ளிவாசல்கள் மற்றும் 35 சட்டவிரோத முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதாக மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

மியன்மாரில் மிக வறுமையான மாநிலமாக உள்ள ரகினேவில் சுமார் 125,000 நாடற்ற ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பெளத்தர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான மதக் கலவரம் காரணமாக பெரும்பாலான முஸ்லிம்கள்  படுகொலை செய்யப்பட்டனர் பல முஸ்லீம் ரொஹிங்கியாக்கள் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

1962இல் இராணுவ அட்சி ஏற்பட்டபோது மாநிலத்தில் பள்ளிவாசல், மதப் பாடசாலைகள் கட்ட தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.