பாஜக வார்டு உறுப்பினர் மாரி முத்துக்கு கெதிராக மக்கள் போர் கொடிமருதங்காவெளி கிராமத்தில் சாலை முழுவதும் கருங்கல் நடந்தால் காலில் ரத்தக்காயம்

முத்துப்பேட்டை பேரூராட்சி 1வது வார்டு மருதங்காவெளி கிராமத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலையில் கருங்கல் மட்டுமே உள்ளதால் அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காலில் ரத்தகாயங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட மருதங்காவெளி கிராமத்தில் 531 மீட்டர் அளவுள்ள கால்நடை மருத்துவமனை சிமெண்ட் சாலை, கடந்த 2011ம் ஆண்டு ரூ.15 லட்சத்தில் போடப்பட்டது. தொடக்கத்திலேயே போதிய தரம் இல்லாமல் போடப்பட்டதால் சாலை பணி முடிந்த சில மாதங்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்து சிமிண்ட் சாலை குண்டும் குழியுமாக சேதமானது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தற்போது சிமெண்ட் சாலை என்ற அடையாளமே தெரியாமல் புதிதாக சாலை அமைப்பதற்கு கருங்கல் கொட்டியதுபோல் கற்களாக உள்ளது. இதில் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். குழந்தைகளுக்கு காலில் ஜல்லிகள் குத்தி ரத்தக் காயம் ஏற்படுகிறது. இந்த சேதமடைந்த சாலையில் செல்லும் சைக்கிள் மற்றும் பைக்குகள் அடிக்கடி பஞ்சராகி விடுவதாக வாகன ஓட்டிகள் வேதனைப்படுகின்றனர். சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சுமார் 5 வருடங்களாக போராடி வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க முன்வரவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் கூறுகையில், நன்றாக இருந்த தார்சாலையை பெயர்த்து விட்டு சிமெண்ட் சாலை போடப்பட்டது. தரமற்ற சாலை போட்டதால்தான் இந்த நிலை. இதற்காக போராட்டம் நடத்தியும் எந்தப் பயனும் இல்லை. வாரத்திற்கு ஒருமுறை நங்கள் சாலையில் நடப்பதற்கு வசதியாக பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளை ஒரு பகுதியில் பொறுக்கி போடவேண்டிய நிலையை அனுபவித்து வருகிறோம். ஒரு குடிநீர் பைப்பை சீரமைத்து தர வேண்டுமென்றால் கூட ஒப்பாரி போராட்டம் நடத்திய பிறகுதான் அதனை சரி செய்கின்றனர். பதவிக்கு வருவதற்கு முன் அதை செய்வேன், இதை செய்வேன் என வாய்க்கு வந்தபடி கூறுகின்றனர். வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு எப்படி ஓட்டுகேட்க வருகிறார்கள் என்று பார்ப்போம். பேரூராட்சி நிர்வாகத்தை நாங்கள் நம்பவில்லை, அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றார்.

நன்றி:  தினகரன் 7.09.2016

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.