கோவை கலவரம்: நீங்க இந்துவா , முஸ்லீமா ? ...... நெத்தியில் பொட்டு வச்சுக்கிட்டா அடிக்காம போய்விடுவாங்கலாமே......ஐந்து வயது இஸ்லாமிய பெண் குழந்தை ஒன்று ஓடி வந்து எங்களை கேட்டது
.".நீங்கெல்லாம் இந்துவா ? முஸ்லீமா ?"
நாங்கள் அதிர்ச்சியோடு மௌனமாக நின்றோம் .
"நெத்தியில் பொட்டு வச்சுக்கிட்டா , இந்துன்னு நினைச்சிட்டு அடிக்காம போய்டுவாங்கலாமா, அதனால் நான் இப்போ பொட்டு வச்சுக்கிட்டேன்" என்றது....

மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் வாசுகி  அவர்களிடம் கேள்விகேட்டு அதிற்சிக்குள்ளாக்கிய சம்பவம் பரப்பரப்பைஏற்படுத்தியுள்ளது

கண்களில் கண்ணீரோடு அக்குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டோம்..!!

இந்த அதிற்சியான சம்பவங்களை  தோழர்  கனக ராஜ்  அவர்கள்  பகிர்ந்துகொள்கிறார் நம்மோடு ....

கோவையில் இந்து முன்னணி நடத்திய வன்முறையில் பாதிக்கப்பட்ட துடியலூர் பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும் , நம்பிக்கையும் தர மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் வாசுகி அவர்கள் தலைமையில் மாதர் ,வாலிபர் சங்க நிர்வாகிகள் சென்றிருந்தோம்.
வன்முறையாளர்கள் எரித்துவிட்டு போன கடைகள் , சூறையாடிப்போன சிம்ஸ் மொபைல் ஷாப் , மஹாலட்சுமி பேக்கரி , ஹைதராபாத் பிரியாணி கடை போன்றவற்றை பார்த்துவிட்டு , அந்த கடைகளின் உரிமையாளர்களையும் சந்த்தித்து விட்டு துடியலூர் நேருவீதி சென்றோம்.
இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கும் பகுதி அது, 20 குடும்பங்கள் வரை அங்கு உள்ளனர் . இந்து குடும்பங்களும் அந்த வீதியில் வசித்து வருகின்றனர் . 23 ஆம் தேதி வன்முறை நடந்த போது , அந்த வீதிக்குள் புகுந்து தாக்க முயற்சி நடந்துள்ளது . ஆயுதங்களுடன் வந்த 10 பேரை பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர்.
திரும்ப வரக்கூடும் என்று முன்னெச்சரிக்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துடியலூர் கிளை தோழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இஸ்லாமிய குடும்பங்களை மாற்றிவிட்டு , தங்கள் வீட்டு பெண்களோடும் , பக்கத்துக்கு வீதி பெண்களையும் இணைத்து கொண்டு அரண்போல நேரு வீதி முகப்பில் நின்றுள்ளனர்
சுமார் 50 பெண்கள் வன்முறையாளர்களை எப்படியும் தடுப்பது என்ற உறுதியுடன் ...
வழியில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி கொண்டே வந்த 200 க்கும் மேற்பட்ட வெறியேற்றப்பட்ட கூட்டம் நேரு வீதியில் நுழைய முயற்சிக்க பெண்களும் , தோழர்களும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளே நுழைய முடியாமல் திரும்பி போயுள்ளனர் .அதன்பின்னும் வன்முறை ஓயும் வரை அங்கு காவல் இருந்து இஸ்லாமியர் வீடுகளை பாத்து காத்து உள்ளனர் .
வன்முறை தாக்குதலுக்கு தங்கள் குறி வைக்க பட்டதையும், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் உயிரையும் பணயம் வைத்து தங்களை பாதுகாத்ததையும் கண்ணீரோடு எடுத்துச் சொன்னார்கள் . இங்கேயே பிறந்து வளர்ந்த எங்களை பாகிஸ்தான் போகச் சொல்லி கோஷம் போட்டார்கள் கையில் ஆயுதங்களை வைத்து கொண்டு. . இன்னும்கூட எங்களுக்கு நடுக்கம் தீரவில்லை என்று ஒரு அம்மா சொன்னார் .
நாங்கள் தாயாய் ,பிள்ளையாய் பழகி வருகிறோம். இங்கு வந்து அவர்களை தாக்குவோம் என்றால் எப்படி பார்த்து கொண்டு இருக்கமுடியும் என்று ஒரு அம்மா சொன்னார் .
மக்கள் ஒற்றுமை மூலமே அவர்களை தனிமை படுத்த முடியும் . நம்பிக்கையோடு இருங்கள் , நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் .

பதிவு - தோழர் Kanaka Raj
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.