இஸ்லாத்தை ஏற்றதர்க்காக வாலிபர் மீது இந்துத்வா வெறியர்கள் தாக்குதல்
மங்கலூருவில் உள்ள தக்சினா கன்னடா மாவட்டத்தின் சுள்ளியா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ஆச்சார்யா. இவர் ஒரு வருடம் முன்பு கேரளாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் தனது பெயரை முஹம்மத் முஸ்தகீம் என்றும் மாற்றியுள்ளார்.
இதனை அறிந்த அவரது பகுதியின் சில இந்துத்வா தலைவர்கள் இவரிடம் உடனே அவர் இந்து மதத்துக்கு மாறவேண்டும் என மிரட்டியுள்ளனர். மேலும் அவர் மதம் மாறியதை விசாரிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை அப்பகுதியின் அரசியல் தலைவர் ஒருவர முஸ்தகீமை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை காண விரும்பாத முஸ்தகீம் தன வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இதில் ஆத்திரமுற்ற இந்துத்வாவினர் அவரை துரத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசாரின் தலையீட்டின் பேரில் முஸ்தகீம் அவர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டு சுள்ளியாவில் உள்ள KVG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
Share on Google Plus

1 comments:

  1. தான் விரும்பும் ஒன்றை செய்வதற்கு சுதந்திரமில்லை்..

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.