பல தீவிரவாத தாக்குதலுக்கு பிஜேபி அரசும் ஜால்ரா ஊடகங்களுமே கரணம்..மாட்டு அரசியலையும்  உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அரசியலையும்  விட்டுவிட்டு நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுஇருக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு போராட வேண்டியது ஒரு நல்ல அரசின்  கடமை.

நவாஸ் ஷெரீப் புகழ்பாடும் பிஜேபி அரசுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இதுபோன்ற தாக்குதல் செயல்கள் நடைபெறுவது தொடர்ச்சியாகத்தானே உள்ளது ....

காந்தகார் விமானக்கடத்தலின் போது அன்றைய பிஜேபி வாஜ்பாய் அரசு விடுவித்த தீவிரவாதிதான் மசூத் அஸார். ஜெ யி எம் இந்த மசூத் அஸார் தோற்றுவித்த அமைப்பு. அதுதான் உரி ராணுவ நிலை மீதான தாக்குலை நிகழ்த்தியிருக்கிறது. என்று பிஜேபி அரசால் கூறப்படுகிறது

2002 காலு சவுக் தாக்குதலுக்குப் பிறகு (அப்போதும் பிஜேபி அரசு)மிக மோசமான தாக்குதலை நமது ராணுவத்தின் மீது நிகழ்த்தி 18 ராணுவவீரர்களை படுகொலை செய்திருக்கிறது.
குஜராத் முதல்வராக இருந்த போது முழங்கிய மோடி பிரதமரான பிறகு நவாஸ் ஷெரீப் பிறந்தநாள்,அவர் பேத்தியின் திருமணம், அவர் அம்மாவுக்கு சூரத் புடவை, ஷால் என்று கொஞ்சிக் குழாவியதன் விளைவு இது.

காந்தகார்,கார்கில் ,நாடாளுமன்றத் தாக்குதல் ,பதன்கோட் விமானதள தாக்குதல் என்று பிஜேபி ஆட்சியில் பாகிஸ்தானோடு பெரும் பின்னடைவை நாம் சந்திக்கிறோம். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் எத்தனை முறை இம்மாதிரியான தாக்குதல்களில் இறங்கியிருக்கிறது? குறுகியகால பிஜேபி ஆட்சிகளின் போது மட்டும் ஏன் இப்படி அதிகமுறை அத்துமீறுகிறது?
காங்கிரஸ் உள்நாட்டில் எவ்விதமான பிரிவினை அரசியலிலும் ஈடுபடுவதில்லை. அதனால் உள்நாட்டுப் பாதுகாப்பில்,வெளிவிகராக கொள்கையில் முழுமையாக கவனம் செலுத்தமுடிகிறது.
ஆனால் பிஜேபியின் முழுக்கவனமும் உள்நாட்டில் குழப்பம்,வன்முறை,மதவெறியை விதைப்பதில் செலவாகிறது. வெளியுறவுக்கொள்கைக்கான நேரமோ, ஆழமான சிந்தனையோ இருப்பதில்லை. போலிதேசியவாதத்தை உரக்கப் பேசுவதோடு சரி. ஜால்ரா ஊடகங்கள் வேறு!


இதை பாகிஸ்தான் தனக்கு சாதகாமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
இது காங்கிரஸ், பிஜேபி சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. தேசத்தின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினை. ஒரு சித்தாந்தம்(காங்கிரஸ் ) உள்நாட்டில் அமைதியை விரும்புகிறது. ஒரு சித்தாந்தம்(bjp ) சொந்தநாட்டு மக்களிடையே சுயநல அரசியலுக்காக குழப்பத்தை விளைவிக்கிறது. இது தேசத்தின் பாதுகாப்பை பாதிக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இனியாவது பிஜேபியும் ,மோடியும் வீர வசனம்,வன்முறை,மதவெறி, ,போலிதேசியவாதம் இவைகளை கைவிட்டு விட்டு தேசப்பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.(நிச்சயமாக செய்யமாட்டார்கள் ) தன் தேசத்து மக்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் இந்திராகாந்தி செய்தார்.56" என்றெல்லாம் அவர் எப்போதும் பேசியதில்லை. வீரம் என்பது 56" மார்பில் இல்லை..தன் தேச மக்களை பாதுகாப்பதில் இருக்கிறது.இதை தான் நேரு தொடங்கி மன்மோகன்சிங் வரையிலான காங்கிரஸ் பிரதமர்கள் செய்தார்கள்.பிரிவினைக்கு எதிராக இருந்ததால் இந்திராவும்,ராஜீவும் படு கொலை செய்யவும் பட்டார்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.