முத்துப்பேட்டையில் கழிவுநீர் குட்டையாக மாறிய குண்டாங்குளம்முத்துப்பேட்டையில் குண்டாங்குளம் கழிவுநீர் குட்டையாக மாறியதால் ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 16வது வார்டு மற்றும் 6வது வார்டுகளை இணைக்கும் குண்டாங்குளத்தெரு குடியிருப்பு பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் குண்டாங்குளம் உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான இந்த குளத்தில் ஒரு காலத்தில் இப்பகுதி மக்கள் குளித்தும், குடிநீருக்கு பயன்படுத்தியும் வந்தனர்.
இந்த குளத்திற்கு நகரில் உள்ள கல்கேணிக்குளம், பட்டரைக்குளம், நூறாங்குண்டு குளம் ஆகியவற்றை இணைக்கின்ற வகையில் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு நீர் வரத்து இருந்து வந்தது.

தற்பொழுது இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்ததால் வாய்க்கால்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டதால் குளத்திற்கு தண்ணீர் வரத்து தடைபட்டது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் இந்த குளம் நிறைந்து தண்ணீர் வடிய முடியாத சூழ்நிலையும் உள்ளது.
இதனால் வருடக்கணக்கில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கழிவு நீர் மற்றும் செப்டி டேங் கழிவுகளை இந்த குளத்தில் குழாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர்.

பேரூராட்சி சார்பில் முறையான வடிகால் வசதி இல்லாததால் பல பகுதியில் உள்ள கழிவு நீரும் இந்த குளத்தில் வடிந்து வருகிறது. அதே போல் அப்பகுதியில் உள்ளவர்களும் பேரூராட்சி பணியாளர்களும் குப்பைகளை கொட்டும் இடமாகவும் இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குளம் முழுவதும் அசுத்தமாக கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கி கிடக்கிறது. கோரை செடிகளும், குளம் தெரியாத அளவில் மண்டிக்கிடக்கிறது. எப்போதும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் வசிப்பவர்கள் பெரும் அவதி அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி பல்வேறு தொற்று நோய்களும் பரவி வருகிறது. இந்த அசுத்தம் அடைந்த குளத்தை சீரமைத்து தரும் வகையில் குளத்திலும், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர் வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கிஷோர் கூறுகையில், பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதியில் உள்ள குளங்களில் அரசு, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி மீட்டு வருகிறது. பொதுமக்களை நோய் பிடியில் வைத்திருக்கும் இந்த குண்டாக்குளத்தை சீரமைக்க ஏன் முன்வரவில்லை? தற்பொழுது இந்த குளம் மிகவும் மோசமான நிலையில் சாக்கடையாக காட்சி அளிக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி இந்த குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முகமது மாலிக் கூறுகையில்: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான குளங்கள் தனியார் ஆக்கிரமிப்புகளில் உள்ளது. அதேபோல்தான் இந்த குண்டாங்குளமும் உள்ளது. கடந்த வருடம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டறைக்குளத்தை சென்னை உயர்நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால் அரசு இன்று வரை பேரூராட்சி தங்கள் வசமாக்கிக்கொள்ளவில்லை. மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வருகிறது, விரைவில் இந்த இரு குளங்கள் தொடர்பாக நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.