ராணுவ வீரர் இறுதி சடங்கில் நிதி திரட்டிய பாரதீய ஜனதா எம்.பியின் ஈன செயலால் அவமானம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர்உரி தீவிரவாத தாக்குதலில் பலியான கணேஷ் சங்கர் யாதவ் இறுதி சடங்கில் உதவுவதற்காக பொது மக்களிடம் நன்கொடை திரட்டிய பாரதீய ஜனதா எம்.பி. சரத் திரிபாதியின் செயலால் அவமான  அடைந்துள்ளோம் என ராணுவ வீரரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் ராணுவ வீரரின் சொந்த ஊரான குரபள்ளியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க கடந்த செவ்வாய் கிழமை திரிபாதி சென்றுள்ளார்.  அவர் அங்கிருந்த பொது மக்களிடம் வீரரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நிதி அளிக்கும்படி கோரியுள்ளார்.

இதனை அடுத்து பொதுமக்களும் நிதியை சேகரித்துள்ளனர்.  இது பற்றி அறிந்த வீரரின் மனைவி குடியா கூறும்பொழுது, என்ன நடக்கிறது என்பதனை அறிந்தவுடன் நாங்கள் அவமான உணர்வினை அடைந்தோம்.  நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை என கூறினார்.  அதன்பின் திரிபாதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் என்று சம்பவத்தினை கண்டவர்கள் கூறியுள்ளனர்.

வீரரின் குடும்பத்தினரை கேவலப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர்களுக்கு உதவிடவே விரும்பினேன் என்றும் திரிபாதி பின்னர் கூறியுள்ளார்.  அதேவேளையில், வீரரின் குடும்பத்தினர் கூறும்பொழுது, எங்களில் பலர் காய்ச்சலினால் அவதிப்பட்டு வருகிறோம்.  அரசு மருத்துவர்களிடம் பல முறை கூறியும் எந்த மருத்துவ உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறினர்.

நேற்றிரவு குடியாவுக்கு காய்ச்சல் அதிகம் இருந்தது.  அதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார் என யாதவின் மூத்த சகோதரர் சுரேஷ் குமார் கூறினார்.  சமீப வருடங்களில் ராணுவம் மீது நடந்த மரண தாக்குதலில் ஒன்றாக, காஷ்மீரின் உரி நகரில் அமைந்த ராணுவ தலைமையகத்திற்குள் கடந்த செப்டம்பர் 18ல் நுழைந்த ஆயுதங்களேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  19 பேர் காயமடைந்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.