முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகைமுத்துப்பேட்டையில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெற்குத்தெரு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல்  திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. கிளை தலைவர் முகமது மீரா லெப்பை கட்டி  நானா தொழுகையை நடத்தினார். அதேபோல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதுத்தெரு ஏ.எஸ்.என்.திடலில் தொழுகை நடந்தது. கிளை தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர் புகாரி,  பொருளாளர் யூசுப், குவைத் மண்டல பொறுப்பாளர் அன்சாரி, துபாய் மண்டல  பொறுப்பாளர் சேக்காதி பங்கேற்றனர்.
மேலும் தவ்ஹீத் ஜமாத்  சார்பில் ஆசாத்நகர் நாடுமில்லில் தொழுகை நடந்தது. தவ்ஹீத் ஜமாத் மாவட்ட  முன்னாள் தலைவர் அன்சாரி, கிளை பொறுப்பாளர்கள் பிர்தொவ்ஸ்கான், ஹாஜாமைதீன்,  நஜிபுதீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகர தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மங்கை மஹால் மில்  திடலில்  மாவட்ட பேச்சாளர் யாசர் அரபாத் பிர்தௌஸி தலைமையில் சிறப்பு தொழுகை  நடந்தது.  கட்டிமேடு கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட பேச்சாளர்  அப்துல்ரஹ்மான் தலைமையில் மர்கஸ் திடலில் தொழுகை  நடந்தது.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடியாச்சேரி கிளை சார்பில்  மர்கஸ்  திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விட்டுக்கட்டி கிளை  சார்பில் மர்கஸ்  திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை மாவட்ட பேச்சாளர் ஷேக்உசேன்  தலைமையில்  நடந்தது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.