கலவரம் செய்வோருக்கு ஆதராக செயல்பட ராஜஸ்தான்' பிஜேபி அரசு கட்டளையிட்டது..! பங்கஜ் சௌத்ரி ஐபிஎஸ்'ஐபிஎஸ்' அதிகாரி 'பங்கஜ் சௌத்ரி' குற்றச்சாட்டு..!!
கடந்த 12-09-2014 அன்று, ராஜஸ்தான் மாநிலம் 'பூந்தி' மாவட்டத்தின் 'கான்பூர்' பகுதியில் பள்ளிவாசலை இடித்தும், முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை சூறையாடிய கலவர கும்பலுக்கு ஆதரவாக செயல்பட, அரசு தன்னை நிர்பந்தித்ததாக, மாவட்ட 'எஸ்பி'யாக இருந்த 'பங்கஜ் சௌத்ரி' குற்றம் சாட்டியுள்ளார்.
கலவரம் தொடங்கிய 3 மணி நேரத்துக்குள் தான் அங்கு சென்றுவிட்டதாக கூறும் 'பங்கஜ் சௌத்ரி' கலவரத்தில் ஈடுபட்ட 11 சங்பரிவார்களை கைது செய்தார்.
 மசூதி இடிக்கப்பட்டதால் கொந்தளிப்பில் காணப்பட்ட முஸ்லிம்களும், சொத்துகளை இழந்து சோகத்தில் இருந்த முஸ்லிம்களும், சட்டத்தின் மீது நம்பிக்கை இழக்காமல் காட்சியளித்தனர், என்கிறார் இந்த காவல் அதிகாரி.
கலவரத்துக்கான திட்டங்களை கச்சிதமாக தீட்டியதை போல, யார் பள்ளியை இடிப்பது, யார் வீடுகளை சூறையாடுவது, கடைகளில் எப்படி கொள்ளையடிப்பது என்பதையெல்லாம் கச்சிததமாக செயல்படுத்திக் கொண்டிருந்த வன்முறையாளர்களை பார்த்து, நான் அதிர்ச்சியடைந்தேன்.
சம்பவ இடத்தில் இருந்து நான் நேரில் கண்ட கோர காட்சிகளை, தலைமை தாங்கி அரங்கேற்றிய 11 நபர்களை கைது செய்தேன், மேற்படி நபர்கள் பல்வேறு குற்றப் பின்னணியுள்ளவர்கள் என்பதையும் கண்டறிந்தேன்.
கைது செய்யப்பட்ட 'VHP' மற்றும் 'பஜ்ரங்தள்' குண்டர்களை விடுவிக்கவும், அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யவும், ராஜஸ்தான் அரசு எனக்கு பலவாறான நெருக்கடிகளையும் கொடுத்தது.
2009-ம் 'பேட்ஜ்'ஐ சேர்ந்த இளம் 'ஐபிஎஸ்' அதிகாரியான 'பங்கஜ் சௌத்ரி' அரசின் அழுத்தங்களுக்கு கட்டுப்படாமல், வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதில் உறுதியை காட்டினார்.
பாஜக அரசு சொல்கிறபடி செயல்பட மறுத்த காரணத்தால், 9 நாட்களுக்குள், 21-09-2014 அன்று, 'பங்கஜ் சௌத்ரி' மாவட்ட எஸ்பி பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு விட்டார்.
புதிய 'எஸ்பி' பொறுப்பேற்றவுடன், முதல் வேலையாக, 11 சங்பரிவார்களை விடுவித்த கையோடு, 5 முஸ்லிம்களை வழக்கில் சேர்த்து விட்டார்.
மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மாவட்ட 'எஸ்பி'யாக இருந்த என் மீதே குற்றம் சாட்டி, ராஜஸ்தான் அரசு வழக்கு தொடுத்துள்ளது என்கிறார், 'பங்கஜ் சௌத்ரி'
தற்போது, டெல்லியில் ராஜஸ்தான் அரசின் 11-வது பட்டாலியன் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள 'பங்கஜ் சௌத்ரி' :
தனக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்கையே உண்மையை வெளிக்கொண்டுவரும் ஆயுதமாக பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த 'பங்கஜ் சௌத்ரி' மேற்குறிப்பிட்ட பல்வேறு தகவல்களை பகிரங்கப் படுத்தியுள்ளார்.
மத்தியிலும்-மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்ட இவர்கள், வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு போலீசின் கைகளை கட்டிப் போட்டுவிட்டால் பிறகெப்படி எங்களால் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்.
உண்மையான 'தேச பக்தி'யும் அரசியல் சாசனத்தின் மீது முழுமையான நம்பிக்கையும் வைத்துள்ள, நான் வழக்கை கண்டு அஞ்சப் போவதில்லை.
மாறாக, அரசு அதிகாரத்தில் இருக்கும் அயோக்கியர்களை நீதிமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அடையாளம் காட்டுவேன் என்கிறார், இந்த இளம் 'ஐபிஎஸ்' அதிகாரி 'பங்கஜ் சௌத்ரி'
சங்பரிவார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உயரதிகாரிகளை போட்டுத்தள்ளுவதும் (உதாரணம் : ஹேமந்த் கர்கரே),
வாய்ப்பில்லாவிட்டால், டிஸ்மிஸ் செய்து வழக்கு தொடுப்பதும் தான் பாஜக அரசின் முக்கிய வேலை.
(உதாரணம்: சஞ்சீவ் பட், ஸ்ரீ குமார் போன்றவர்கள்)
'பங்கஜ் சௌத்ரி'யை இன்னும் டிஸ்மிஸ் செய்யாமல் பணியில் நீடிக்கவிட்டிருந்தாலும், வழக்கு விசாரணைகளின்போது, இவர்களை காட்டிக் கொடுக்க முயன்றால், இந்த அதிகாரியின் கதையை முடிக்கவும் இவர்கள் தயங்கமாட்டார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.