முத்துப்பேட்டையில் டாஸ்மாக் கடையை மாற்ற கோரிக்கை



முத்துப்பேட்டையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழுடைந்த கட்டிடத்தில டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. எனவே கடையை உடனே மூட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே அரசு டாஸ்மாக் கடை  உள்ளது. தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கும் இந்த டாஸ்மாக் கடையில் எந்தநேரமும் கூட்டம் காணப்படுவதால் பொது மக்களுக்கும், அப்பகுதி வியாபாரிகளுக்கும் மிகவும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இந்த கடைக்கு பார் வசதி இல்லாததால் அருகிலேயே வெட்ட வெளியில் குடிமகன்கள் மது அருந்துகின்றனர்.

இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும். அல்லது இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையின் இருபுறமும் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்ததால் புதிய கட்டிட பணி துவங்குவதற்காக அவை சமீபத்தில் இடிக்கப்பட்டது.

இதனால் டாஸ்மாக் இயங்கும் கட்டிடத்தின் சுவர்கள் இருபுறமும் சிமென்ட் பூச்சுகள் இல்லாமல் செங்கற்கள் வெளியே தெரிகின்றன. மேலும் சுவர்களும் பலமிழந்து காணப்படுகிறது. சுவர் இடிந்து விழுந்தால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களுக்கும், அப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும். அல்லது இடம் மாற்றம் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில் குமார் கூறுகையில், இங்கு இயங்கும் இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடை இயங்கும் கட்டிடம் பழுதடைந்து உயிர் பலியை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதுகுறித்து  டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் தெரிவித்து விட்டோம். எல்லோரும் அலட்சியமாக உள்ளனர். இனியும் காலதாமதம் ஏற்படுத்த வேண்டாம் என்றார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.