ஜெயிலில் உள்ளேயும் இந்துத்துவாவின் பரப்புரைகள்...!இந்துத்துவா கலவரங்கள் பலவற்றை நிகழ்த்தியுள்ளது. மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேஷ் போன்றவற்றில் அது தொடராக நடாத்திய கலவரங்களில் சிறப்புத் தேர்ச்சியும் அடைந்துள்ளது. உதாரணமாக ஒரு சாம்பில் உங்களிற்காக...

திட்டமிட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறைகளிற்கு அவர்கள் உணற்ச்சியூட்டி, ஆக்ரோஷப்படுத்தி ஏவிவிடும் கும்பல் இருவகை. கொள்ளையடித்தலை மையமாகக் கொண்டவை ஒரு வகையினர். முஸ்லிம்கள் மீதான துவேசத்தை கொண்டவர்கள் இன்னொரு வகையினர். ஆனால் இவர்கள் அனைவருமே அதன் அங்கத்தவர்கள் கிடையாது.
சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் கூட்டத்தினர். முஸ்லிம்களின் பதில் தாக்குதல் நடாத்தும் போது இவர்களினால் நின்று பிடிக்கவே முடிவதில்லை. ஓடித்தப்பி விடுவார்கள். இந்நிலையில் இந்துத்துவா அதன் இலக்கை எட்ட முடியாமல் தோற்றுப் போய் விடுகிறது.

“முஸ்லிம் விரோத எண்ணங்களை” வெறும் உணர்வுகளாக இல்லாமல் சித்தாந்தமாக கொண்டு செயற்படும் கூட்டமே இறுதி வரை கலவரக் களங்களில் நின்று பிடிக்கும். அவர்களிற்கு ஒவ்வொரு துளுக்கனின் மரணமும் உணர்வுகளை வலுப்படுத்தும். இப்படியான கொள்கைவாதிகளையே இந்துத்துவா எதிர்பார்க்கிறது.

அதில் அவர்களிற்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. வருபவர்கள் கொள்கைவாதிகளாக இருந்தாலும், இரத்தம், சதை, நரம்பு, எலும்பு என எல்லாவற்றிலும் கொலை வெறியூறியவர்களாக சில நேரம் இருப்பதில்லை.
அவர்கள் இனவாதிகள் ஆனால் அஹிம்சாவாதிகள். இலக்கை அடைய முடியாத கணங்கள் இந்துத்துவாவிற்கு.

இதற்கான முதன்மை தீர்வை மும்பாயில் சிவச்சேனா முன்வைத்தது. கொடிய கைதிகள் உள்ள சிறைச்சாலைகளிற்குள் தங்கள் தாயிகளை அனுப்புவது. அவர்கள் ஒரு குற்றத்தை செய்து விட்டு செல்லிற்குள் செல்வார்கள். பின் தங்கள் பரப்புரை பிரச்சாரங்களை ஆரம்பிப்பார்கள்.
கைதிகளை பிரச்சாரம் செய்து மூளைச்சலவை செய்து பின் பட்டியலை தலைமைக்கு அனுப்புவார்கள்

. தலைமை அந்த கைதிகளின் விடுதலைக்காக அப்பீல் கோர்ட் வரை செல்லும். அவர்கள் பினையிலோ அல்லது விடுதலையாகியோ வெளியில் வந்தால் அவர்களை அப்படியே உள்வாங்கி கரசேவகர்களாக மாற்றி விடும்.
இப்படியான நொட்டோரியஸ் கிரிமினல்கள் கரசேவகர்களாக மாற்றம் பெற்று காவி வேட்டியும் செந்தூரப் பொட்டும் வைத்து கலவரக் களங்களில் இறங்கும் போது முஸ்லிம்கள் மீதான வன்முறை மிக மோசமானதாக மாறுகிறது.
இது போலவே சிறு குற்றங்கள் செய்து பணம் கட்டி ஜமீனில் வர முடிாயதவர்களையும் வெளியில் எடுத்து பெருங்குற்றம் செய்யும் கரசேவகர்களாக மாற்றுகிறது இந்துத்துவா.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.