முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வல பாதை கலெக்டர், அதிகாரிகள் ஆய்வுமுத்துப்பேட்டையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வல பாதையில் கலெக்டர் நிர்மல் ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

முத்துப்பேட்டை :  முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வல பாதையை கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய, நகர இந்து முன்ணனி நடத்தும்  24ம் ஆண்டு  விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், உப்பூர் உட்பட 19 கிராம பகுதியிலிருந்து  சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. ஊர்வலத்தில் பங்கேற்கும் விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் ஜாம்புவானோடை வந்து சேர்ந்தன.

ஊர்வலம் ஜாம்புவானோடை சிவன் கோயிலடியில் துவங்கி வடகாடு, கல்லடிக்கொல்லை, தர்கா, ஆசாத்நகர் பாலம், பழைய பஸ்ஸ்டாண்ட், பங்களாவாசல் வளைவு, செம்படவன்காடு ரயில்வே கேட்வழியாக பாமணியாறு பாலத்தை சென்றடையும். பின்னர்  பாமணியாற்றில் விசர்ஜனம் செய்யப்படும். கடந்தாண்டை போலவே இந்தாண்டு  ஊர்வலத்திலும்  சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் முத்துப்பேட்டைக்கு வந்த திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ்,  டி.ஆர்.ஓ மோகன்ராஜ்,  ஆர.டி.ஓ செல்வசுரபி  மற்றும் வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விநாயகர் ஊர்வலம் துவங்கும் இடம் மற்றும் ஊர்வல பாதையை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பங்களாவாசல் முதல்  செம்படவன்காடு ரயில்வே கேட் வரை ஊர்வல பாதை சிதிலமடைந்து  உள்ளது. சாலை பழுதை உடனடியாக சரி செய்திடவும், தேவையான இடங்களில் தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் முத்துப்பேட்டை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் அதிமுக பிரமுகரால்  ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தகரசெட் கடையையும் காரிலிருந்தபடியே கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டார். அதிமுக பிரமுகரால் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த கடையை அகற்றிக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் விதித்த 24 மணிநேர கெடு நேற்றோடு முடிந்தது. அதன் பின்னரும் கடை
அகற்றப்படவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.