பட்டுக்கோட்டையில் பல ஆண்டுகால மரம் சாலையில் விழுந்ததால் பரபரப்புபட்டுக்கோட்டையில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை. அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் மெயின்ரோட்டில் கரிக்காட்டில் நேற்று காலை 25 ஆண்டுகால 30ம் நம்பர் எண் கொண்ட பூ மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதில் அருகே இருந்த மின் கம்பம் மற்றும் அதன் கொண்டை வளைவு வளைந்தது. இதனால் அப்பகுயில் பரபரப்பு ஏற்பட்டது. மரம் விழுந்ததால் டெலிபோன் மற்றும் மின்கம்பி அறுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இந்த மெயின்ரோட்டில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களும் உள்ளது.

மரம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்து 28வது வார்டு திமுக கவுன்சிலர் பரமேஸ்வரன் கொடுத்த தகவலின்பேரில் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அவ்வழியே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து 28வது வார்டு திமுக கவுன்சிலர் பரமேஸ்வரன் கூறுகையில், பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் மெயின்ரோட்டில் சாலையோரத்தில் சுமார் 50 ஆண்டுகளான தென்னை மரம், தூங்குமூஞ்சி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மரங்கள் பட்டுப்போய் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது. இந்த வழியாக தான் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.

ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் விபத்து ஏற்படுவதற்குள் அபாயநிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும்படி நெடுஞ்சாலைத்துறையினருக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் தற்போது ஒரு மரம் முறிந்து விழுந்துள்ளது.

எப்போதும் வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில் மரம் முறிந்து விழுந்த நேரத்தில் எந்த வாகனங்களும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து ஏற்படவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலாவது பட்டுப்போன, அடிப்பகுதி சேதமடைந்த மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.அதிகாரிகள் அலட்சியம்

இதுகுறித்து முறிந்த மரத்தின் வாசலில் குடியிருந்து வரும் மீன் வியாபாரி செல்வம் கூறுகையில், நாங்கள் இது குறித்து பலமுறை தெரிவித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. ஒருவேளை இதே பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். மரங்கள் எவ்வளவு முக்கியமோ? அந்தளவிற்கு மனித உயிர்களும் முக்கியம். உயிரிழப்புகள் ஏற்பட்டால் தான் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மரங்களை அப்புறப்படுத்துவார்களா? என்றார் வேதனையுடன்.

இதேபோல் பட்டுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் நீண்ட நாட்களான மரங்கள் பட்டுப்போகி, அடிப்பகுதி சேதமடைந்துள்ளது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.