மாட்டிறைச்சி உண்டதாக கூறி கற்பழிக்கப்பட்ட பெண்கள்!ஹரியானாவில் மேவாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, 20 வயது பெண் ஒருவரும் அவரது 14 வயது உறவினரும் அவர்களது வீட்டில் வைத்தே பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலா வரும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், தங்களை தாக்கி கற்பழித்தவர்கள் நாங்கள் மாட்டிறைச்சி உண்பதால்தான் கற்பழிக்கப்படுகிறோம் என்று கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் கற்பழிக்கப்படும்போது “இந்த பக்ரீதின் போது உங்களால் பசுக்களை அறுக்க முடியாது” என்றும் கூறியுள்ளனர்.  பாதிக்கப்பட்ட இரு பெண்களின் உறவினர்களையும் கட்டி வைத்து அடித்துக் கொலை செய்துள்ளனர் இந்த பயங்கரவாதிகள்.
மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மியின் முன்பு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தனது வாக்குமூலத்தை அளித்தார். அதில், “அவர்கள் எங்களிடம், நீங்கள் மாட்டிறைச்சி உண்பீர்களா? என்று கேட்டனர். நாங்கள் இல்லை என்று கூறினோம். ஆனாலும் அவர்கள் நீங்கள் மாட்டிறைச்சி உண்பதால்தான் நாங்கள் உங்களை கற்பழிக்கின்றோம் என்று கூறினர்” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை ஹரியானா காவல்துறை இது குறித்து அமைதி காத்து வந்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ இது குறித்து தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறி வந்தது. காவல்துறை உயரதிகாரி ஒருவர் “இதுவரை இந்த வழக்கில் பசு பாதுகாவலர்கள் மீதான எந்த தொடர்பும் வெளிவரவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அத்துமீறி நுழைதல், மற்றும் கற்பழிப்பு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் நடத்திய போராட்டங்களினால் அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் இருவருக்கு ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் கால்நடை வர்த்தகர்களிடம் இருந்து பணம் பறிப்பவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த குற்றவாளிகளுள் ஒருவனான ராகுல் வெர்மா தனஹ்டு ஃபேஸ்புக்பக்கத்தில் தன்னை ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டனாக குறிப்பிட்டுள்ளான்.
கடந்த சில மாதங்களாக பசு பாதுகாப்பு என்கிற பெயரில் பல தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேவாத்தில் சிலர் அளிக்கும் புகார்களின் பேரில் நெடுஞ்சாலைகளின் ஓரம் இருக்கும் பிரியாணி கடைகளில் இருந்து உணவு மாதிரிகளும் எடுத்து மாட்டிறைச்சி பறிமாறப்படுகிறதா என்று அவ்வப்போது சோதிக்கப்படுகிறது.
ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஒன்று மேவாத். வருகிற செவ்வாய் கிழமை தியாகத் திருநாள் கொண்டாப்பட இருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களின் உணவகங்களில் காவல்துறை நுழைந்து சோதனைகள் செய்வது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.