அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி கால்பந்து போட்டியில் சாதனைபட்டுக்கோட்டை மண்டல கால்பந்து போட்டி 30/08/2016 மற்றும் 01/09/2016 ஆகிய இரு தினங்கள் கரம்பயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற மொத்த அணிகள் 12.

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சீனியர் பெற்ற வெற்றி விபரம்.. மதுக்கூர் 2-0, ஆலத்தூர் 2-0, கரம்பயம் 2-1 என வென்று சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் மண்டல விளையாட்டு பட்டம் வென்றது.

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஜூனியர் பெற்ற வெற்றி விபரம்… கரம்யம் 1-0, ஆலந்தூர் 3-0, இமாம் ஷாபிஈ (ரஹ்) பள்ளி 4-0 என வென்று மாவட்ட கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்ந்த சில வருடங்களாக கால்பந்து போட்டியில் வெற்றி பெறுவது சிறப்புக்குறியது. சென்ற வருடம் சீனியர் அணி மாநிலப் போட்டியில் கலந்து கொண்டது சிறப்புக்குறியது. பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திரு. A. ராஜா திரு. A. ஜெயகாந்தன் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மான்புமிகு நிர்வாகி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.