தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 6.15 மணியளவில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சீதாராமன் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது அடுத்த மாதம் 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறித்தார்.

இதுகுறித்து மேலும் சீதாராமன் கூறுகையில் ‘‘தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையில் இருந்து தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 3-ந்தேதியாகும். மனு மீதான பரிசீலனை 4-ந்தேதியும், வேட்புமனு திரும்பபெறுதலுக்கான கடைசி தேதி 6-ந்தேதியாகும்.

17-ந்தேதி மற்றும் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 24-ந்தேதிக்குள் அனைத்து நேர்முக தேர்தல் நடைபெற்று முடிந்துவிட வேண்டும். வெற்றி பெற்றவர்களின் பதவி ஏற்பு மற்றும் முதல் கூட்டம் 26-ந்தேதி நடைபெறும்.

மேயர் போன்ற மறைமுக பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் 2-ந்தேதி நடைபெறும்’’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.