முஸ்லிம் ஆடும்! இந்து ஆடும் ! விழுப்புணர்வு கதை
ஒரு விவசாயி தன்  இரண்டு ஆடுகளுக்கு
ஒன்றுக்கு முஸ்லிம் என்ற பெயரையும்
ஒன்றுக்கு இந்து என்ற பெயரையும் வைத்து வளர்த்து வந்தார் !
இரண்டு ஆடுகளும் ஒன்றாகவே வளர்ந்தன!
விவசாயியை தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுக்கிறார்!
நிருபர்: ஆட்டுக்கு சாப்பிட என்ன கொடுப்பீங்க
விவசாயி: முஸ்லிமுக்கா, இந்துவுக்கா ?
நிருபர்: முஸ்லிமுக்கு
விவசாயி: புள்ளுத்தான்
நிருபர்: அப்போ இந்துவுக்கு
விவசாயி: அதுக்கும் புள்ளுதான்
நிருபர் : எதுல குளுப்பாட்டுவீங்க
விவசாயி:: முஸ்லிமையா ? இந்துவையா ?
நிருபர் : இந்துவை ?
விவசாயி: தண்ணில தான்
நிருபர் : அப்போ முஸ்லிமை
விவசாயி: அதையும் தண்ணில தான்
நிருபர்: எங்கே கட்டிபோடுவீங்க
விவசாயி: முஸ்லிமையா ? இந்துவையா ?
நிருபர்: முஸ்லிமை
விவசாயி: கொட்டகைல தான்
நிருபர்: அப்போ இந்துவை
விவசாயி: அதையும் கொட்டகைல தான்
நிருபர்: யோவ் ரென்டுக்கும் ஒரேமாதிரி தானே செய்யறே அப்புறமென்ன?
விவசாயி: அதுவந்து இந்து ஆடு என்னோடது.
நிருபர்: அப்போ முஸ்லிம் ஆடு ?
விவசாயி: முஸ்லிம் ஆடும் என்னோடதுதான்
நிருபர்: நீ என்ன லூசா ?
விவசாயி : நீங்கதான்டா லூசு ?
நிருபர் : என்னய்யா சொல்றே ?
விவசாயி : துப்பாக்கி, வெடி குண்டு வச்சு போலிசையும் , ராணுவத்தையும் தாக்கினால் அவங்க யாரு ?
நிருபர் : தீவிரவாதிகள்!
விவசாயி : அப்ப ஏண்டா அதை முஸ்லிம் செஞ்சா தீவிரவாதின்னும், இந்து செஞ்சா சாமியார் ஆதரவாளர்கள் ன்னும் சொல்றே ?
நிருபர் : ஹி ஹி ஹி....
(இந்த விஷயம் இப்போது எல்லாருக்கும்
தெரிய ஆரம்பிச்சாச்சா...??!!!)

ஊடக செய்தி :
கைது செய்யப்பட ராம்பால் சாமியார் ஆசிரமத்தில்,
- 315 பிஸ்டல்கள்,
- 2 டபுள் பேரல் துப்பாக்கிகள்,
- 3 ரிவால்வர்கள்,
- 19 ஆசிட் நிரப்பப்பட்ட ஏர்கன்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் ஏராளமான தோட்டாக்களும் கையெறி குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.)
நன்றி - பெரியார் பகுத்தறிவு பாசறை...
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.