முஸ்லிம் நீதிபதிகளே இல்லாமல் செயல்படும் உச்சநீதிமன்றம்! முன்னால் நீதிபதி கவலைநீதிபதி எம். ஒய். இக்பால் மற்றும் நீதிபதி பக்கீர் முகம்மது இப்ராகிம் கலிபுல்லா ஆகிய இருவரும் ஓய்வு பெற்றதை அடுத்து உச்ச நீதிமன்றம் முஸ்லீம் நீதிபதி இல்லாமல் செயல்படுகின்றது. என முன்னாள் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

நீதிபதி எம். ஒய். இக்பால் மற்றும் நீதிபதி பக்கீர் முகம்மது இப்ராகிம் கலிபுல்லா ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதி இக்பால் இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியும், நீதிபதி கலிபுல்லா ஜுலை 22ம் தேதியும் ஓய்வு பெற்றார்கள்.இதனை அடுத்து தற்போது உச்சநீதிமன்றம் முஸ்லீம் நீதிபதிகளே இல்லாத மன்றமாக செயல் படுகின்றது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக, முஸ்லீம் நீதிபதி இல்லாமல் இந்திய உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது என கவலை தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.