முத்துப்பேட்டை தாலுகா அறிவிப்பை நடைமுறைபடுத்த காலதாமதப்படுத்தும் தமிழக அரசு மீது பொதுநல வழக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவுமுத்துப்பேட்டையை தனி தாலுகாவாக 2011ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் தருவாயில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தாலுகா அறிவிப்பை தற்போதைய அரசு நடைமுறை படுத்தவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு புதிய தாலுகா அறிவிப்புகளில் முத்துப்பேட்டையை அறிவிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் அனைத்துக்கட்சி கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் நடந்தது. தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக அறிவித்தும் இதுவரை நடைமுறை படுத்தாத தமிழக அரசை கண்டித்து முதல்கட்டமாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது. முத்துப்பேட்டை தாலுகா அறிவிப்பை நடைமுறைபடுத்த காலதாமதப்படுத்தும் தமிழக அரசு மீது விரைவில் பொதுநல வழக்கு தொடரப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மாணிக்கம், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், நகர செயலாளர் சீனிராஜேந்திரன்,  வர்த்தக கழக பொது செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் நகர  செயலாளர் மார்க்ஸ், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் யோகநாதன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர்  காளிமுத்து, விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம், பாஜ ஒன்றிய தலைவர்  ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட பொருளாளர் வெற்றி, நகர  செயலாளர் கண்ணதாசன், தமாகா மாவட்ட விவசாய பிரிவு தலைவர்  சந்திரசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.