விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளுக்கு போலீஸ் தடைவிநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பல இடங்களில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் அமைத்துள்ளனர். இந்த சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சிலைகள் அமைத்த நிர்வாகிகளுக்கு 20 கட்டளைகளை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
20 கட்டளை:

* சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் களி மண்ணால்தான் செய்யப்பட்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் ரசாயன கலவை வர்ணம் கொண்டு சிலைகள் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* உயரமான சிலைகளை செய்வதால், ஊர்வலத்தின் போது சாலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் பாலத்தில் மோதி சிலைகளுக்கு சேதம் ஏற்பட்டு, இதனால் சிலையுடன்செல்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிலைகளின் உயரம் 10 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

* சிலை அமைப்பாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் சிலையின் உயரம், பீடத்தின் உயரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
* புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடையாது. பொது இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல் துறை அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே சிலை வைத்து வழிபட வேண்டும்.

* தீப்பிடிக்காத கல்நார் ஓடு அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஓடு கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையை கீற்று அல்லது துணிகளால் வேயக்கூடாது.

* மின்சார வசதி அமைக்கும் போது வயர்களை சரியான முறையில் இணைத்து அதன்மேல் மின் கசிவு ஏற்படாத வண்ணம் டேப்பை சுற்றி வயரிங் செய்திருக்க வேண்டும். அதிகப்படியான வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்துவதை தவிர்க்க வேண்டும்.

* சிலை அருகே குறைந்தது 2 வாளி மணல்,
தண்ணீர் மற்றும் நீளமான இரண்டு கம்புகள் முன் எச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும். 24 மணி நேரமும் சிலை அருகே 25 வயதிற்கு மேற்பட்ட குறைந்தது 2 பேரை சம்பந்தப்பட்ட அமைப்பினர் பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் வழங்க வேண்டும்.

* ஊர்வலத்தின் போது தேவையற்ற இடங்களில் வாகனத்தை நிறுத்தி பிறர் மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்புதல் கூடாது. ஊர்வலத்தின் போது பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்க
கூடாது.

* சிலை அருகே புகை பிடிப்போரை அனுமதிக்கக் கூடாது.

* பொது இடங்களில் திடீர் கோயில்கள் அமைத்தல் கூடாது.

* சிலை இருக்கும் கொட்டகையில் தேவையற்ற பொருட்ள் ஆயுதங்கள்  சிலை அருகே வைத்திருக்கக் கூடாது.

* பெட்டி வடிவ ஒலி பெருக்கியைத்தான் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சத்தமாக ஒலி பெருக்கியை இயக்கக் கூடாது.

* ஊர்வலப்பாதை, சிலை அமையும் இடம் முதலியன முந்தைய ஆண்டுகளில் இருந்தவாறே பார்த்துக் கொள்ள வேண்டும்.

* சிலைகளை வேகமாக செல்லும் வேன், டாடா ஏசி போன்ற வாகனங்களில்தான் எடுத்து செல்ல வேண்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் இரண்டு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடாது.

* அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் பாதை வழியாகத்தான் சிலைகளை எடுத்துச் சென்று அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும்தான் சிலைகளை கரைக்க வேண்டும்.

* ஊர்வலம் குறிக்கப்பட்ட நேரத்தில் நடைபெற வேண்டும்.

* ஊர்வலத்தின்போது சிலைகளை ஏற்றிச் செல்லும் வாகனம் பழுதடைந்தால் மாற்று வண்டி தயாராக இருக்க சம்பந்தப்பட்ட அமைப்பினர் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
* சிலைகளை கடலில் கரைக்கும்போது பக்தர்கள் கடலின் ஆழப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் காவல் துறை வழங்கும் அறிவுரைகளை சிலை அமைக்கப்படவுள்ள நாட்கள் மற்றும் ஊர்வலத்தின்போது பின்பற்றி காவல்துறையுடன் ஒத்துழைத்து விநாயகர் சதுர்த்தி விழா எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.