வழிமறித்தது காவிக்கூட்டம்... பறிமுதல் செய்தது காவல்துறை... மீட்டெடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்..
வழிமறித்தது காவிக்கூட்டம்...
பறிமுதல் செய்தது காவல்துறை...
மீட்டெடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்...

ஹஜ் பெருநாள் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் மாட்டு வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தில் வாரந்தோறும் நடக்கும்  மாட்டு சந்தைக்கு மாடுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இதையொட்டி நாளை செவ்வாய் கிழமை நடக்க இருக்கும் மாட்டு சந்தைக்கு பாலசுப்பிரமணியம் என்பவர் கரூரிலிருந்து  TDG 459 என்ற என்னுடைய கனரக வாகனத்தில் மாடுகளை ஏற்றி வந்தார்.

அந்த வாகனம் நெல்லை குலவனிகர் புரத்தை கடக்கும்போது முப்பது பேர் கொண்ட காவி கும்பல் வாகனத்தை இடைமறித்து விலை பேசுவது போல் முற்றுகையிட்டு முடக்கி நிறுத்தியது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை எப்போதும் போல அநியாயமாக அந்த மாடுகளை பறிமுதல் செய்தது.

செய்தி அறிந்த நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கன நேரத்தில் களம் இறங்கினர்.

காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளும் காவித்துறை கபோதிகளும் சூழ்ந்து நிற்க நமது நிர்வாகிகள் "இதை எப்படி அனுகுவது என்பது எங்களுக்கு தெரியும்" மிகப்பெரிய பின்விளைவை சந்திக்க நேரிடும் என்பதை கம்பீரமாக எடுத்து உரைத்தனர்.

வேறு வழியின்றி மாடுகள் ஏற்றி வந்த வாகனத்தை விடுவித்தனர் காவல்துறை.

எங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் இது துவக்கம் தான் இனி தமிழகத்தில் எங்கே இதுபோல் நடந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் உயிரை கொடுத்தாவது எங்கள் உரிமையை மீட்டெடுப்போம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு : தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்த விசயத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே குர்பானிக்காக கொண்டு வரப்படும் மாடுகளை எங்காவது மனித மிருகங்கள் வழிமறித்தால் அருகிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.