முத்துப்பேட்டை அருகே கோடரியால் வெட்டி தாய் கொலை மகன் வெறிச்செயல்திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே  விளாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மாவதி (60). இவரது 4 வது மகளுக்கு திருமணம் செய்ய பத்மாவதி ஏற்பாடு செய்து வந்தார். திருமண செலவுக்காக வீட்டுமனை ஒன்றை தனது மகன் மூலம் விற்றார். இந்நிலையில் அவரது மகன் சுபாஷ்சந்திரபோஸ் வீட்டுமனை விற்ற பணத்தை தாயிடம் தராமல் செலவழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பத்மாவதி கேட்டார். இதனால் ஆத்திமடைந்த சுபாஷ்சந்திரபோஸ், நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்த கோடரியால் பத்மாவதியை  வெட்டினார். இதில் காயமடைந்த பத்மாவதியை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி நேற்று இறந்தார். இதுபற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சுபாஷ் சந்திரபோசை தேடி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.