இஸ்லாமிய பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட நான்கு பேர் சுட்டு கொலை எட்டு பேர் கவலைக்கிடம்உத்திர பிரதேசம் பிஜ்நோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இஸ்லாமிய பெண் ஒருவரை சில இந்து சமூகத்து இளைஞர்கள் அவர் பேருந்தில் செல்லும் போது ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பெண்ணின் குடும்பத்தார் நால்வர்  துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்  கொலை மேலும் 6 பேர் கவலைக்கிடம் செய்யப்பட்டவர்கள்1.இஹ்சான்
2.சர்தாஜ் 3.அனீஸ் 4.ரிஸ்வான்  ஆகியோர் ஆவர்.
1.ஃபுர்கான் 2.அன்சர் 3.சலீம் 4.அலாவுதீன் 5.ஷானவாஸ் 6.சர்ஃபராஸ்  ஆகியோர் கவலைக்கிடம்

இன்னும் சில மாதங்களில் உத்திரபிரதேச தேர்தலை   கருத்தில் கொண்டு காவி பயங்கரவாதிகள் செயலில் இறங்கிவிட்டார்கள் என்ற சந்தேகம் எழுகிறது .

காவல்துறையின் கூற்றுப்படி காலை 7:30 மணிக்கு சம்பந்தப்பட்ட பெண்ணை ஜாட் இன இளைஞர்கள் ஆபாசமாக கிண்டல் செய்துள்ளனர். அதனை அப்பெண்ணின் உறவினர்கள் தட்டிக் கேட்க அவர்களுக்குள் மோதல் ஏற்ப்பட்டுள்ளது. உடனே அப்பகுதி மக்கள் அந்த மோதலை தடுத்து அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் 8 மணியளவில் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள சுமார் 100 பேர் கொண்ட ஜாட் இன கும்பல் ஒன்று இவர்களின் பகுதியில் ஒன்று கூடியுள்ளது. அதில் சிலர் அந்த முஸ்லிம் குடும்பம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நான்கு  பேர் உயிரிழந்துள்ளனர், பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இப்பகுதியில் மேலும் மோதல்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து காவல்துறை கூறியதாவது, அப்பெண்ணின் குடும்பம் மீது அவர்களின் சுற்றுப்புற வீடுகளின் மேல் இருந்து பெல்லட் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியவர்கள் சுட்டுள்ளனர். தாக்குதல் சமயத்தில் அப்பகுதியில் இருந்த மூன்று காவல்துறையினர் பணியில் அலட்சியமாக இருந்த காரணத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று முரதாபாத் பகுதி டி.ஐ.ஜி.ஓங்கார் சிங் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயம்பட்ட 8 பேர் பிஜ்நோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நிலைமை மோசமாக உள்ளவர்கள் மீரட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த ஹசீனுதினின் மகன் முஹம்மத் தாலிப் கான் இந்த தாக்குதல் பற்றி கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு சவரக் கடைக்கு தீ வைத்துள்ளனர் என்றும் பின்னர் கற்களை எரியத் துவங்கினர் என்றும் கூறியுள்ளார்.
பின்னர் சிலர் வர்களின் வீட்டின் அருகே உள்ள வீடுகளிலும் மரங்களிலும் ஏரி துப்பாக்கியால் சுட்டனர் என்றும் இவை அனைத்தும் மூன்று காவலர்கள் முன்னிலையில் நடந்தது என்றும் இதனை தடுக்க அவர்கள் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். தனது அண்டை வீட்டார் காவல்துறை அவசர எண்ணான 100 க்கு பல அழைப்புகள் செய்தும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.