சசிக்குமாருடன் செல்போனில் பேசியவர்கள் யார்? போலீஸ் விசாரணை. அஸ்தி கரைக்க அனுமதி மறுப்பு .கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகரின் செல்போனை தொடர்புகொண்டு பேசிய பெண்கள் யார்? அவர் களுக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் மர்ம நபர்களால் அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் இறுதி ஊர்வலத் தின்போது வன்முறைச் சம்பவங் கள் நடந்தன.

தற்போது கோவையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கொலை வழக்கில், குற்றவாளி களை கைது செய்ய ஏற் கெனவே ஏற்படுத்தப்பட்ட 6 தனிப் படைகள் 8 தனிப்படைகளாக அதி கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையும் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் இயங்குகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கொலை யான சசிக்குமாரின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தபோது, சில பெண்களிடம் சசிக்குமார் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எதற்காக அவரை தொடர்பு கொண்டனர்? அவர்கள் பேசியதற்கும், இக்கொலைச் சம்பவத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது” என்றனர்.

இக்கொலை தொடர்பாக வேறு விதமான கருத்துகளும் பரப்பப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின் றனர். ஆகவே இதுகுறித்து நட வடிக்கை எடுத்து, ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சசிக்குமாரின் அஸ்தியை இன்று (புதன்கிழமை) அவரது உறவினர் கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆற்றில் கரைப்பதாக முடிவு செய் யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அங்கு டிஐஜி தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

ஊர்வலத்துக்குத் தடை

இந்நிலையில் அங்கு அஸ்தி கரைக்கவும், ஊர்வலமாகச் செல்ல வும் போலீஸார் அனுமதி வழங்க வில்லை. அதைத் தொடர்ந்து கோவை சாடிவயல் அருகே அஸ்தியை கரைக்க அனுமதி அளித்துள்ளதாகவும், ஊர்வல மாகச் செல்ல அனுமதி இல்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.