தமிழகத்திலேயே கூடுதலாக அரசு நிதி செலவிடும் முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்!!! படஙகள் இணைப்புமுத்துப்பேட்டை விநாயகர்  ஊர்வலம் நடக்கும் நாள் வந்தாலே  இரண்டு மூன்ற வாரம் முன்னாலேயே முத்துப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்  என்ன நடக்குமோ என்ற மரண பீதீயும்  பயமும் ஏர்பட்டு விடும்

உள்ளூர் வெளியூர் பிரயாணிகளின் சிரமம்

உள்ளூர்  வெளியூர் வணிகர்களின் வியபாரம் பாதிப்பு

இப்பொழுது ஹஜ் பெருநாள் சீசன் என்பதால் வியபாரம் பெரும் அளவில் பாதிப்பு

தஞ்சை சரக டி.ஐ.ஜி செந்தில்குமார்  தலைமையில் மூன்றுமாவட்ட
(எஸ்.பி) மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்கள்  பத்து பதினைந்த
(டி.எஸ்.பி)    துணை காவல் கண்காணிப்பாளர்கள் முப்பதுக்கும் கூடுதலாக சர்கிள் இன்ஸ்பக்டர்கள் நூற்றி ஐம்பதை தாண்டும்
சப் -இன்ஸ்பக்டர்கள்  இரண்டாயிரத்திற்கும் மேல்  ஆண் பெண் காவலர்கள்  இவர்களை தங்கவைப்பதற்கு 3- 4 திருமண மண்டபங்கள்
பள்ளி கூடங்கள்  இவர்களுககு  உணவு ஏற்பாடு  இதற்கு ஆகும் சிலவுகள்

பதினைந்திற்கு மேல் தீ அணைப்பு வாகனங்கள்
100, 120  தீயணைப்பு வீரர்கள் இதற்கு ஆகும் சிலவுகள்

மாவட்ட ஆட்சியர்  டி .ஆர் .ஒ  மூன்று நான்கு ஆர்.டி.ஒ
ஐந்து ஆறு தாசில்தார்கள்  பத்து பதினைநது பி டி ஓ க்கள்
20.25 வி எ ஓ இன்னும் ஏரளமான அரசு அதிகாரிகள்  ஊழியர்கள்

முத்துப்பேட்டையை ஏதோ காஷ்மீர் போல நகரின் எல்லா இடங்கிலும்
கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு கோபுரங்கள்  இதற்கு ஆகும் சிலவுகள்

ஆசாத்நகர்பாலம் செக்கடி குளம் கரை பாமணியாறு பாலம் இன்னும் ஏரளமாண இடங்களில் பாதுகாப்ப்பு வேலி  இதற்கு ஆகும் சிலவுகள்

சிலைகளை கரைக்கும் இடமான பாமணியாறு கரை  சரிப்படுத்துதல்
இதற்கு ஆகும் சிலவுகள்

ஊர்வலம்  ஜாம்புவானோடை சிவன் கோயிலடியில் துவங்கியது முதல் சிலைகளை  கரைத்து விட்டு திரும்பும் பக்தர்கள்?  திரும்பி  செல்லுவது வரை வாகனங்களை முத்து்ப்பேட்டை நகரினுல் செல்லவிடாமல்
செம்படவன்காடு  பைபாஸ் வழியாக திருப்பிவிட்டு பயனிகளை சிரமத்திற்குள்ளாக்குவது...  இன்னும் ஏராளம் ....

இதற்கல்லாம்  எவ்வளவு சிலவாகிறது என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்  இது எல்லாம்  யாருடைய சிலவு அரசுடைய சிலவு தாணே சிந்தித்து கொள்ளுங்கள்

இந்த சிலவுகளுக்கள்ளாம் விழா கமிட்டியாரிடம் இருந்து ஒரு ரூபாய் போலும் வாங்குவதில்லை.....

மேலும் ஒரு தகவல்   முத்துப்பேட்டை விநாயகர்  ஊர்வலகத்திற்கு என்றே  வெளிநாடுகளில் இருந்து  பல லட்சங்கள்  வசூலாகிறது
இது போதாதென்று உள்ளூர் நகை கடை முதல் சிறிய பெட்டிக்கடை வரை  சென்னை  தஞ்சை பட்டுக்கோட்டை  திருத்துறைப்பூண்டி  நாகை இன்னும் பல ஊர்களிலிருந்து பல லட்சங்கள் நிதி திரட்டப்படுகிறது

சென்ற வருடம் மட்டும் 85 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டது  என்றும்
அதை பங்கு வைக்கும் பொழுது நிர்வாகிகளுக்குள் சில கசமுச ஏற்ப்பட்டு முத்தான  சாதிகாரர் ஓரகட்டப்பட்டார்   என்றும் அதை ஆண்ட  சாதிகாரர் இடைபட்டு பஞ்ஜாயத்து நடந்தது என்றும் அதிலிருந்து  முத்தான  சாதிகாரர்  ஒதுக்கப்பட்டு  ஓரங்கட்டப்பட்டார் என்றும்
கேள்வி

 முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலபதையை மாற்ற வேண்டும் என்று முத்துப்பேட்டை  வாழ் முஸ்லீம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைத்த வண்ணமே உள்ளனர்  அரசு அதை கண்டு கொள்வதே கிடையாது

அரசின் இந்த மெத்தன போக்கே விநாயகர்  ஊர்வல கமிட்டியாருக்கு லாபம் பாதையை மாற்றியால் வருசா வருசம் காவி சிந்தனை உள்ள  இந்துகளின் உணர்வை தூண்டி விட்டு பல லட்சங்கள் நிதி திரட்டி அதை ஏப்பம் விட முடியாது போலும்...

இப்பொழுது புரிந்து இருக்கும்  முத்துப்பேட்டை விநாயகர்  ஊர்வலம்  நடத்துவற்கு எவ்வளவு சிலவகிறது என்று

இந்த முத்துப்பேட்டை விநாயகர்  ஊர்வலம் யாருக்கா நடத்தப்படுகிறது?
எதற்காக நடத்தப்படுகிறது?  என்று மக்களும் அரசும்  அரசு எந்திரங்களும் சிந்தித்தால் சரி

சென்ற ஆண்டு காவல் துறையும் மாவட்ட ஆட்சியரும் சிறப்பக செயல்பட்டு சரியான நேரத்தில்  ஊர்வலம் தொடங்கி மாலை ஆறு மணிக்கு முன்பாக ஊர்வலத்தை நிறைவு செய்து  எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாத்தது போல் இந்த வருடமும்  சரியான முறையில் திட்டமிட்டு செயல் படுத்துவார்கள் என்று எதிர்பார்போம்...


நமக்கெள்ளாம்  இந்த விநாயகர்  ஊர்வலம் என்ற பெயரால் நண்பனகா அண்ணாக தம்பியாக மாமனக மச்சானக  வாழ்ந்து வருகின்ற நம் மாற்றுமத சகோதரர்களை  சாதி மத வெறியை ஊட்டி பிரித்து விடுவார்களோ என்ற அதங்கமே....

எப்போது திரும்புமோ 25தைந்து வருசத்திற்கு முன்னால் உள்ள உறவு முறைகள் ........

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.